பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் குழந்தை நூல்களும், நூலகச் சாதனங்களும் வாங்கு வதற்காக ஆண்டுதோறும் வரவு-செலவுத் திட்டத்தில் குறிப்பிட்ட அளவுக்குத் தனி நிதி ஒதுக்கப்படுகிறது. நூலகம் இயங்கி வரும் வட்டாரத்தில் உள்ள குழந்தை களின் எண்ணிக்கை என்ன? புதிதாக எத்தனை குழந்தை கள் நூலகத்திற்கு வருவார்கள்? புதிய தேவைகளுக்கு ஏற்ப அதிகமாக எந்த அளவுக்கு நூல்களும் சாதனங்களும் தேவைப்படும் என்பதை ஆண்டுதோறும் மதிப்பிட்டு. அந்த அடிப்படையில் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படுகின்றன ஒருங்கிணைப்பு அதிகாரியின் ஆலோசனைப்படி, பல்வேறு நூலகங்களுக்கான நிதிகள் வழங்கப்படுகின்றன. நூலகங்களிலுள்ள நூல்கள் அனைத்தும், மற்றச் சாத னங்களும் குழந்தைகளுக்குத் தேவையான சமயத்தில் உடனுக்குடன் எளிதில் கிடைப்பதற்கான எல்லா வசதி களும், ஏற்பாடுகளும் நூலகத்தில் செய்யப்படுகின்றன. குழந்தைகளின் மனம் எப்பொழுதும் ஒரேவிதமான நூல் களே நாடுவதில்லை. அறிவும், வயதும் ஏற ஏற அவர்களின் சுவையும் மாறிக்கொண்டே வருகின்றது. எனவே, குழந்தை களின் இரசனையில் எத்தகைய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதை அவ்வப்போது கண்டறிந்து, அதற்கு ஏற்ப புதிய நூல்களேயும் சாதனங்களையும் வாங்கி நூலகத்தில் சேர்க் கிருர்கள். குழந்தைகள் அதிகம் விரும்பிப் படிக்கும் நூல் களில் பல படிகள் வாங்குகிரு.ர்கள். அதிகம் பயன்படுத் தாமல் ஒதுக்கித் தள்ளப்பட்ட நூல்களை அகற்றி விடு கிருர்கள். இதன் காரணமாக நூலகத்திற்கு எந்த நாளும் வந்து நூல்களைப் படிக்கும் ஆசை குழந்தைகளுக்கு ஏற்படு கிறது. குழந்தைகளுக்கான நூல்களையும், மற்றச் சாதனங் களேயும் வாங்கிப் பராமரிப்பது சம்பந்தமான சட்ட திட் டங்கள் நூலகப் பணிக் கொள்கை அறிக்கையில் சேர்க்கப் பட்டிருக்கின்றன. குழந்தைகள் பிரிவில் எந்தெந்த நூல்