பக்கம்:பழைய கணக்கு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



எது திரட்டு? எது திருட்டு?

நான் ராஜாஜியின் விசிறி. அவரது எழுத்தும் நகைச்சுவை மிக்க பேச்சும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் பேசும் கூட்டங்களுக்குத் தவறாமல் போய் விடுவேன். குட்டிக் கதைகள், பொருத்தமான உவமைகள் மூலம் தாம் சொல்ல வந்ததை விளக்குவதில் ராமகிருஷ்ண பரமஹம்சருக்குப் பின் ராஜாஜியை மிஞ்சியவர் யாருமில்லை. கல்கி ராஜாஜியைப் பற்றி மிகவும் புகழ்ந்து எழுதுவார். அந்தப் புகழ்ச்சியில் மிகை இருந்ததில்லை. இதெல்லாமாகச் சேர்ந்து ராஜாஜியின் மீது நான் கொண்டிருந்த மரியாதை பக்தியாகவே மாறி விட்டது.

ராஜாஜியின் குட்டிக் கதைகளையும். உவமைகளையும் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட வேண்டுமென்பது என் நீண்ட நாள் அவா. ராஜாஜி பேசும் எந்தக் கூட்டத்துக்கு நான் போனலும் குறிப்பெடுக்கத் தவறமாட்டேன். நான் குறிப்பெடுத்து எழுதியவை போக மேலும் சில உவமைகளைச் சென்னை பல்கலைக் கழக நூல் நிலையத்துக்குப் போய் அங்கே சேர்த்து வைப்பட்டிருந்த பழைய ஹிந்து நாளிதழ்களிலிருந்து எடுத்துச் சேகரித்தேன்.

ராயபுரம் ராபின்ஸன் பூங்காவில் ஒரு கூட்டம். ராஜாஜி முதலமைச்சராக இருந்த போது இந்த மாகாணத்தில் (அப்போதெல்லாம் மாகாணம்) மதுவிலக்குச் சட்டம் கொண்டு வந்தார். ராஜாஜி எந்தச் சட்டம் கொண்டு வந்தாலும் அதைப்பற்றிப் பொது மக்களிடையே போய் விளக்கம் தருவது வழக்கம். விற்பனை வரிச் சட்டம் கொண்டு வந்த போது கொத்தவால் சாவடியில் கூட்டம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/19&oldid=1145672" இலிருந்து மீள்விக்கப்பட்டது