உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பழைய கணக்கு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

71

எழுந்து எதிரில் இருந்த கோயிலுக்குப் போய், அங்கே யாரோ அடித்த சதிர்த் தேங்காய்ச் சிதறல்களைப் பொறுக்கிச் சாப்பிட்டேன். அன்றைக்கெல்லாம் அவ்வளவுதான்.

மறுநாள் காலை சற்றுத் தொலைவிலுள்ள ஆற்றுக்கு நடந்தே போய் துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்தபோது மயக்கமாய் வந்தது. கண்களில் மின்மினிப் பூச்சிகள் பறந்தன. கை நிறையத் தண்ணீரை அள்ளிக் குடித்துப் பசியை ஏமாற்றினேன்.

இன்றைக்கும் பட்டினி கிடக்க வேண்டியதுதானா? பொறுக்க முடியாத பசி காரணமாக அழுது விட்டேன். திடீரென்று பின் பக்கத்திலிருந்து ஒரு குரல்.

“சுவாமிகளே, இலை போடறதுக்கு மணி ஒண்ணுகுமா?”

சற்று துரத்தில் நாலைந்து வைதிக பிராம்மணர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவருடைய குரல்தான் அது.

“ஒகோ, எங்கேயோ சாப்பாடு போடுகிறார்கள் போலிருக்கிறது. இவர்களோடு கூடவே போனால் நமக்கும் சாப்பாடு கிடைக்குமே!” அவர்களைப் பின்பற்றி நடந்தேன். சந்நிதித் தெருவில் ஒரு வீடு. அங்கே ஏதோ விசேஷம். யாரோ இறந்து பதினாலவது நாள் சுப காரியம் நடக்கிற்து.

அந்த பிராம்மணர்கள் எல்லோரும் அந்த வீட்டுக்குள் போய் விட்டார்கள். எனக்குத் தைரியம் இல்லை. யாராவது அதட்டி, “யாருடா நீ!” என்று கேட்டு விட்டால்? தயக்கத்துடன் வாசல் திண்ணையிலேயே உட்கார்ந்து உள்ளே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். முன்கட்டில் ஓமப்புகையும், பின்கட்டில் சமையல் வாசனையும் ‘சாப்பாடு நிச்சயம் உண்டு’ என்பதை அறிவித்தன.

வாசலில் கைவண்டி ஒன்று வந்து நின்றது. சாம்பல் பூசனிக்காய், வாழை இலை கட்டுகள், பலாப்பழம், வாழைப் பழத் தார், இன்னும் என்னென்னவோ வண்டி நிறைய... இடையில் புகுந்து பலாப்பழத்தை எடுத்துக் கொண்டு வேகமாய் நடந்து சமையல் கட்டில் கொண்டு வைத்தேன்.

“அம்பி, இந்தா...உள்ளே போய் எண்ணெய் எடுத்துண்டு வாடா, பலாப்பழம் நறுக்கலாம்” என்றார் சமையல்காரர். கணிரென்ற குரல். வால்கிண்ணம் ஒன்றை என்னிடம் தந்தார். அதை வாங்கிக் கொண்டு போய் உள்ளே மாமியிடம் எண்ணெய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/72&oldid=1146015" இலிருந்து மீள்விக்கப்பட்டது