பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 1 களவியல் மாந்தருள் இருபாலுங் கூடி இன்பந்து-த்து அறஞ்செ-து ஒழுகும் இல்லற வாழ்க்கை, களவாகத் தொடங்குவதும் கற்பென்னும் வெளிப் படை யாகத் தொடங்குவதும் என இருவகைப்படும். கூடி இன்பந்து-க்கும் பருவ மடைந்த ஓர் இளைஞனும், ஓர் இளைஞையும் பிறர் இல்லாத இடத்தில் தற் செயலாகத் தலைக்கூடிக் காதலொருமித்துப் புணர்ந்து, பின்பு வெளிப்படை யாகக் கூடி வாழத் தொடங்கும்வரை, குறித்த இடத்திற் சிறிதுகாலம் பெற் றோர்க்கும் மற்றோர்க்கும் தெரியாது நாள்தொறும் அல்லது அடிக்கடி மறை வாகக்கூடியொழுகும் ஒழுக்கம் களவாம்; அதன்பின் வெளிப்படையாகக் கூடிவாழும் வாழ்க்கை கற்பாம். ஆணும் பெண்ணும் பிறர்க்குத் தெரியாது மறைவாகக் கூடிப்புணர்தல் பலவகையில் நிகழுமேனும், மணமாகாத எதிர்ப்பா விளந்தையர் இருவர், தெ-வ ஏற்பாட்டின்படி தமியராக ஒருவரையொருவர் கண்டவுடன் காதலித்து மே-மறந்து புணர்ந்து, அன்றே நிலையான வாழ்க்கைத்துணைய ராவதும், அடுத்தோ சிறிதுகாலம் இடையிட்டோ கற்பாக மாறுவதும், அதற்குத் தடை யேற்படின் இருவரும் உயிர் துறப்பதுமான உயரிய மறை வொழுக்கமே, தமிழ் நூல்களிற் களவெனச் சிறப்பித்துச் சொல்லப்படுவதாம். களவென்பது மறைவு. களவாக வொழுகும் ஒழுக்கம் களவெனப்பட்டது; ஆதலால் யாதொரு தீதுமற்றதாம். இத்தகைய வொழுக்கம் ஒரோவோ ரிடத்து ஒரோவொரு சமையத்து ஒரோவோரிணையரிடத்தன்றி, எவ்விடத் தும் எக்காலும் எல்லா ரிடத்தும் நிகழ்வதன்று. ஆதலாற் கோவைப் பனுவல்களிலும் இத் திருக்குற ளின்பத்துப் பாலிலும் களவுங் கற்பும் ஒரே தொடர்ச்சியாகக் கூறப்பட்டிருப்பது பற்றி, கற்பெல்லாங் களவொடு தொடங்கு வனவாகக் கருதற்க. மாந்தன் பெறக்கூடிய பேறுகள் என்னும் வகையில் எல்லாப் பொருள் களையும் அறம்பொரு ளின்பம் வீடென நான்காக வகுத்து,