பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 திருக்குறள் தமிழ் மரபுரை எனத் திருவள்ளுவமாலைச் சொ-யுள்களுள் ஆறு இன்பம் அல்லது இன்பு என்றே குறித்தலையும். இரண்டே காமம் என்னுஞ் சொல்லை ஆளுதலையுங் காண்க. பரிமேலழகர் காமம் என்னுஞ் சொல்லை ஆண்டதற்கு அவரது வடமொழி வெறியே கரணியம் என்பதையும் அறிக. ஆயினும், அச் சொல்லுந் தென்சொல்லே யென்பதை அவர் அறியார். காமம் ஆசையாகிய கரணியம்; இன்பம் அதன் விளைவாகிய து-ப்பு. உலக இன்பங்களுள் தலைசிறந்ததும் ஐம்புல இன்பங்களையும் ஒருங்கே கொண்டதும் பெண்ணின்பமே. அவ் வின்பம் ஆடவர்க்குப் போன்றே பெண்டிர்க்கும் ஐம்புல வின்பந் தருவதால் இருபாற் பொதுவாம். ஆயினும், ஆண்பாலின் வலிமை மேம்பாடும் உரிமைச் சிறப்பும் வலியத் துப்பும் து-ப்பாற்றலும் அடக்கக் குறைவும்பற்றி ஆண்பா லின்பமாகவே பொதுவாகக் கருதவுஞ் சொல்லவும்படும்.