உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

பிரதாப முதலியார் சரித்திரம்

லிருந்து ஜனங்கள் அங்குமிங்கும் ஓடுவதும் கூக்குரலுமாக இருந்தது. நான் என் வீட்டைவிட்டு வெளியே புறப்பட்டு என்ன சப்தமென்று விசாரித்தேன். பனம்பள்ளிக் கிராமத்துக்குப் போன எல்லோரும் திரும்பி வந்து வந்துவிட்டதாகவும், ஊருக்கு வந்தபிற்பாடு ஒரு பல்லக்கிலாவது ஞானாம்பாள் இல்லையென்றும் அவள் காணாமல் போயிருக்கிற காரணந் தெரியாமையினால் அவளைத் தேடுவதற்காகப் பல இடங்களுக்கும் ஆட்கள் ஓடுவதாகவும், நான் கேள்வியுற்று அப்படியே திகைத்துத் திடுக்கிட்டுச் சற்று நேரம் மதிமயங்கியிருந்தேன். பிற்பாடு என் தேகம் நிலைகொள்ளாமல் எழுந்து, நானும் என் இஷ்டர் ஒருவரும் இரண்டு பெரிய குதிரைகளின் மேலே ஏறிக்கொண்டு ஆயுதபாணிகளாய் வடக்கே நோக்கிப் புறப்பட்டோம். ஞானாம்பாளைத் தொடர்ந்து கொண்டு ஓடுவதுபோல் அதிவேகமாகச் சென்று பல இடங்களிலும் தேடி ஆராய்ந்துகொண்டு பனம்பள்ளி கிராமத்துக்குப் போய் விசாரித்தோம். அங்கும் ஞானாம்பாள் இல்லையென்று தெரிந்து உடனே புறப்பட்டு வடக்கு ரஸ்தா வழியே போனோம். அந்தக் கிராமத்துக்குக் காதவழி தூரத்தில், அஸ்தமிக்கிற சமயத்தில் ஒரு சிறிய சகடம் ரஸ்தாவில் கொஞ்ச தூரத்தில் எங்களுக்கு நேரே வந்தது. அந்த வண்டியை நாலு பேர் வளைத்துக் கொண்டு, தெற்கே வருகிற வண்டியைப் பலவந்தமாய் வடக்கே திருப்பிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் இரண்டு பேர் குதிரையின் மேலும், இரண்டு பேர் பாதசாரிகளாயும் இருந்தார்கள். அவர்கள் வண்டியைத் திருப்பும்போது அந்த வண்டியிலிருந்து பெண்களுடைய கூக்குரல் ஒலி கிளம்பிற்று. அந்த துஷ்டர்கள் நாங்கள் வருவதைப் பார்த்தவுடனே, குதிரையின் மேலிருந்த இருவர்களும் கத்திகளை உருவிக் கொண்டு எங்களை