பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராக்‌ கொள்ளைக்காரன்‌

215

“உங்களைக் கண்டு கொள்ளுகிறோம்”” என்றான். தேவராஜப் பிள்ளையும் அந்தப்படி வேண்டிக்கொண்டபடியால் அவர்களுடைய பிரார்த்தனையை நிராகரிக்க மாட்டாமல், நானும் ஞானாம்பாளும் இன்னும் ஒரு மாசம் வரைக்கும் ஆதியூரில் இருக்கும்படி நிரம்மியமாக உத்தரவு கொடுத்துவிட்டு, என் தாய் தகப்பனார் மாமனார் மாமியார் முதலானவர்கள் சத்தியபுரிக்குப் போய் விட்டார்கள்.




32-ஆம் அதிகாரம்
இராக் கொள்ளைக்காரன் பகற்
கொள்ளைக்காரர்களை வெளிப்படுத்தியது

ஒரு நாள் இரவு ஒரு தையற்காரன் அவனுடைய மேல் வேஷ்டியில் ஒரு ரூபாயை முடிந்து தோளிற் போட்டுக் கொண்டு தெரு வீதி வழியாகப் போனான். அதை நிலா வெளிச்சத்தில் ஒரு திருடன் கண்டு, அந்தத் தையற்காரனைப் பின் தொடர்ந்து சென்றான். திருடன் தொடர்ந்து வருவதைத் தையற்காரன் கடைக் கண்ணாற் கண்டும், காணாதது போல் நடந்தான். திருடன் அரவஞ் செய்யாமல் கிட்ட நெருங்கி அந்த முடிச்சைக் கத்தரிக்கோலினாற் கத்தரித்தான். உடனே தையற்காரன் திரும்பி, அவன் கையிலிருந்த கத்தரியினால் திருடன் காதைக் கத்தரித்து விட்டான். அந்த உபத்திரவம் பொறுக்க மாட்டாமல் திருடன் “”கூ! கூ! கொலை! கொலை!”” என்றான். உடனே தையற்காரன் ”“கூ! கூ!கொள்ளை! “கொள்ளை!!” என்றான். பிறகு கள்ளன் தையற்காரனைப் பார்த்து ““இந்தா! உன் பணம்”” என்று