பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 144 திருப்பூவனத்திலிருந்து எட்டரை மைல் தூரத்திலுள்ள திருப்பாச்சேத்திக்கு வருவதற்குள் வெள்ளைப் பட்டாளம் சுதந்தர வீரர்கள் கையில் பட்ட அவதி சொல்லி முடியாது. இந்தச் சந்தர்ப்பத்தில் நடைபெற்ற போரில் மேஜர் கிரே தன் உயிரையே இழந்தான். அவன் நெஞ்சைக் குறி பார்த்துச் சுட்ட மருதுபாண்டியர் படை தனக்கு இருந்த ஆத்திரத்தில் அவன் பிணத்தையும் கண்ட துண்டமாக்கிவிட்டது. மருதுபாண்டியர் படை வீரர்களுள் அறுபது எழுபது பேர் வெட்டுண்டு மாண்டனர்; ஆங்கிலப் படைகள் கண்ட சேதமும் அதிகம். படைத்தளபதிகளுள் பலர் படுகாயப் பட்டனர். இந்நிலையில் லெப்டினன்ட் பார்மின்டன், லெப்டினன்ட் ஸ்டூவர்ட்டு என்ற இருவரும் மருதிருவர் படை தங்கியிருந்த பக்கத்துக் காடு ஒன்றில் படையுடன் புகுந்து தாக்கினர். சினங்கொண்ட சுதந்தர வீரர்கள் வெள்ளைப் படையோடு வீரப் போரிட்டு அப்படை புறமுதுகு காட்டும்படி செய்தார்கள். அதோடு படை வீரர்களிடமிருந்து தளபதி பார்மின்டனைத் தனியாகப் பிரித்து வைத்து நையப்புடைத்தார்கள். ஐந்து முறை உடலைக் குத்திக் குத்திப் புண்ணாக்கினார்கள்; லெப்டினன்ட் கர்னல் ஸ்டூவர்ட்டின் மோவாய்க்கட்டையை நொறுக்கினார்கள். துணைக்கு வந்த வெள்ளைப் படைகளை அறுநூறு எழுநூறு விடுதலைச் சகாக்கள் ஒன்று திரண்டு உழக்கி எறிந்தார்கள். இந்த ஒருநாட்போரில் மட்டுமே கர்னல் வெல்ஷ் கணக்குப்படி மேஜர் கிரே கொல்லப்பட்டான் பிளாக்கர், கோல், பார்மின்டன், ஸ்டுவர்ட்டு என்னும் தளபதிகள் படுகாயமுற்றார்கள். படை வீரர்களுள் 16 பேர் உயிரிழந்தனர்; முப்பத்தைந்து பேர் புண்பட்டனர். ஜூன் மாதம் 10 ஆந்தேதி வெள்ளைப்படை வைகைக்கரை வழியாக விரைந்தது. காட்டு வழியே கடுகிச் சென்று கொண்டிருந்த ஏகாதிபத்திய வெறியர்களை மானாமதுரைக்கும் பார்த்திபனூருக்கும் இடையே மூவாயிரம் சுதந்தர வீரர்கள் தங்கள் முழுப்பலத்தையும் பயன்படுத்தித் தாக்கினார்கள். அந்நியப் படைகள் பலத்த இழப்புக்கு இரையாயின. பத்து ஐரோப்பியரும் எண்பத்து ஆறு கூலிப்படைகளும் இப்போரில் உயிரிழந்தனர் என்பது வெள்ளையர் கணக்கு. நம் வீரர்கள் அடைந்த இவ்வெற்றிக்குச் சிவகங்கைச் சீமையின் பூகோள அமைப்பே பெருந்துணையாய் இருந்து விட்டது என்பது வெள்ளையர் கருத்து. பார்த்திபனூரை அடைந்த வெள்ளைப் பட்டாளங்கள் கிடுக்கிக்குள் அகப்பட்டது போலச் சிக்கிக் கொண்டன. சுற்றிலும் காடு, தப்பத் திசை தெரியவில்லை. பகற்பொழுதும், வெள்ளைச் சிப்பாய்களைச் சுதந்தர வீரர்களிடம் பத்திரமாக ஒப்படைத்து விட்டு விரைவாகவே விடைபெற்றுக் கொண்டது. ஒரே இருள் மருது படைக்கோ, திருவிழா விருந்து அன்று தங்கட்குக் கிடைத்த அனுபவத்தைப் பற்றிக் கர்னல் வெல்ஷின் நாட்குறிப்பு, ‘எங்கட்கு ஒரு வினாடியும் ஒய்வில்லை. இரவெல்லாம் துன்பம். எங்கள்