பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147 பேராசிரியர் ந.சஞ்சீவி நான் கண்ட இந்திய நகரங்களுக்குள்ளேயே எளிமையும் அழகும் ஏற்றமும் பொருந்திய நகரம் என்று வெள்ளைத் தளபதி ஒருவனாலேயே’ போற்றப்படும் சிறப்பு வாய்ந்த சிறுவயல் நகரம் செந்தீக்கு இரையாகியது. விடுதலை வீரர்களால் தீ வைக்கப்பட்ட அத்திரு நகரம், எனக்கும் தேச பத்தியும் தன்மானமும் உண்டு. கற்புடைய மகள் போல அனல் வாய்ப்பட்டு அழியினும் அழிவேனேயன்றி, அந்நியர் கைப்படேன்' என்று எழுநாவிட்டு எரிந்தது. காற்றுத்தேவனும் சுழன்று சுழன்று அடித்து அக்கற்புடை நகரின் ஆசையை நிறைவேற்ற நெடுநேரம் குற்றேவல் புரிந்தான். இறுதியாகத் தீப்பிழம்பாய்க் காட்சி அளித்த அந்நகரை வெள்ளைப்பட்டாளம் ஜூலை மாதம் 30 ஆம் தேதி கைப்பற்ற முடிந்தது." சிறுவயல் நகரைப் பிடித்த வெள்ளைப்பட்டாளம், அடுத்துக் காளையார் கோவிலைப் பிடிக்கப் படாதபாடு பட்டது. அது பற்றிய விவரங்களை ஆராயுமுன் இப்போரோடு தொடர்புடைய வேறு சில முக்கிய நிகழ்ச்சிகளும் வேறு திசையில் நடைபெற்றன. நாம் சிறிது முன்பு மருதிருவர் படை இராமநாதபுரத்தின் வடபகுதியைத் தன் வயமாக்கிக் கொண்டதன் விளைவாக அப்பகுதி முழுவதும் புரட்சி வீரர்களின் பாசறையாய் விளங்கியது என்பதை அறிந்தோமல்லவா? இராமநாதபுரத்தின் வடபகுதியைக் கைப்பற்றிய மருதுவின் படை இராமநாதபுரத்தையே கைப்பற்றிவிடும் என்ற நிலை ஏற்பட்டது. வெள்ளையர் பெரிதும் கலங்கினர் கலெக்டர் லூவிங்டனோ, என்ன ஆனாலும் சரி நடப்பது நடக்கட்டும் சிவகங்கைப் போர் முடியட்டும், பார்த்துக் கொள்ளலாம்' என்று தன் இரு கண்களையும் இறுக மூடிக் கொண்டிருந்தான். அவ்வளவு பயம் அவனுக்கு மருதிருவர் படையோ, கமுதிக்கோட்டையை எப்படியாவது கைப்பற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஆவலால் பலமாகத் தாக்கிக் கொண்டிருந்தது; வெள்ளையர் வசமிருந்த திருப்பத்துர்க் கோட்டையைத் தாக்கி வெற்றிக் கொடியைப் பேரார்வத்துடன் உயர்த்தியது. இவ்வாறு வேறு வேறு முனைகளில் மருதிருவர் படை கடும்போர் புரிந்து கொண்டிருக்கும் வேளையில் கடலூரிலும் போர் மூண்டது. ஆம், இந்தியாவின் முதல் விடுதலைப்போர் நீர்மேலும் நடந்தது; நிலத்தின் மேலும் நடந்தது. சிவகங்கைச் சீமை உள் நாட்டிலேயே அமைந்திருந்தாலும், சீமை பிரிந்தபோது சேதுபதியோடு செய்து கொண்ட ஓர் ஒப்பந்தத்தின்படி தொண்டித் துறைமுகம் சிவகங்கைச் சீமைக்கு உரியத்ாய் இருந்தது. அமைதியான நாள்களில் சீமையின் வியாபாரத் துறைமுகமாய் இருந்த அத்தொண்டித் துறைமுகம் இப்போது விடுதலைப்போரின் தலை வாயிலாய்த் திகழ்ந்தது. விடுதலைப் போர் மூண்டதும் வங்காளக் குடாக்கடலில் அரிசி ட்டைகளை ஏற்றிக் கொண்டு திரியும் வெள்ளையர்க்குச் சொந்தமான