பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151 பேராசிரியர் ந.சஞ்சீவி ஆகஸ்டு மாதம் 16 ஆம் தேதியிலிருந்து போரின் கடுமை அதிகமாயிற்று. காட்டுக்குள் சிக்கிய கயவர் கூட்டத்தை உயிரோடு வெளியே அனுமதிக்கக் கூடாது என்பதே சிவகங்கை வீரர் ஒவ்வொருவரின் விருப்பமும். இதன் விளைவாக ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி நடந்த சுதந்தரப் போரில் வெள்ளைப்படை உயிர் தப்பியது அருமையினும் அருமையாயிற்று. காடு வெட்டிகளால் ஒரு சிறிதும் தங்கள் கைவரிசையைக் காட்ட முடியவில்லை. ஆகஸ்டு மாதம் 17 ஆம் தேதி வெள்ளைப்படை.இதுவரை அமைத்து வந்த பாதைக்கு வலப்புறத்தில் ஆயிரத்து இருநூறு கெஜத்துரம் உள்ள ஒரு சிறு பாதையை இடத் தொடங்கியது. ஆகஸ்டு மாதம் 18 ஆம் தேதி புதிய பாதை வழியாக முன்னேறிக் கொண்டிருந்த ஏகாதிபத்தியப் படையைத் தமிழ் மக்கள் கொன்று குவித்தார்கள். இன்றும் கடுமையான துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இரையான வெள்ளைப் படை வீரர்களால் தங்களைச் சுடுகின்ற சுதந்தர வீரர்கள் எங்கிருந்து குறி பார்த்துத் தங்களைக் கொல்லுகிறார்கள் என்பதைச் சிறிதும் அறிந்து கொள்ளக் கூடவில்லை. கர்னல் இன்ஸ் மயிரிழையில் உயிர் தப்பினான். ஆகஸ்டு மாதம் 19 ஆம் தேதி வெள்ளைப் படையை நடுக்காட்டில் வைத்து நாற்புறமும் சூழநின்று விடுதலை வீரர் சுட்டுத் தீர்த்தனர். ஆனால் வெள்ளைப்படை வீரர்களின் கண்களில் ஒரு விடுதலை வீரன் படவேண்டுமே! அது தான் இல்லை. என்ன மாயமோ அது கடுமையான துப்பாக்கிப் பிரயோகத்தைத் தங்கள் மீது செய்து கொண்டிருந்த சுதந்தரப் படைகளின் குன்றுகளினின்றும் தப்ப ஓர் அற்புதமான வழியைக் கையாண்டன ஆங்கிலப் படைகள். ஆம். அது அப்படைக்கு வெற்றியும் தந்தது. நின்று கொண்டே விடுதலை வீரர்களோடு போரிட்டால் தங்கள் நெஞ்சு சல்லடைக் கண்களாகிவிடும் என்று அறிந்த வெள்ளைப் படை வீரர் உட்கார்ந்து கொண்டே சுடலானார்கள். இதன் விளைவாக நாற்புறமும் சுற்றி நின்று சுட்ட நம் விடுதலை வீரர்களின் குண்டுகள் அவர்களை மீறி எதிர் எதிர்த்திசைகளில் பாய்ந்தன. அந்தோ! அழிவு பேரழிவு நேர்ந்தது அப்படியிருந்தும் வெள்ளைப் படைகள் மேலும் முன்னேற முடியாமல் புறங்காட்டி ஓடின. கர்னல் அக்கினியூ தன் கடுமையான பகைவர்கள் போக்கைக் கண்டு கலங்கிப் போனான். கண்ணுக்குத் தெரியாத இந்தத் துப்பாக்கி வீரர்களைத் தேடிப் பிடிப்பதில் படுதோல்வி அடைந்தது வெள்ளைப் பட்டாளம். வெள்ளைப் பட்டாளத்தை வேரறுக்கக்கூடியிருந்த விடுதலை வீரர்களின் தொகையே 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையில் இருக்கும் என்று கருதப்பட்டது. ஆகஸ்டு மாதம் 20 ஆம் தேதி முக்கிய நிகழ்ச்சி ஒன்றும் நடைபெறவில்லை.