பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

211 பேராசிரியர் ந.சஞ்சீவி ஜமீனை ஜப்தி செய்து ஏலமாக்கிய பணத்தை நான் கட்டி ஏலத்தை நீக்கி அனுபவித்து வருகிறேன். என்னைத் தவிர வேறு யாரொருவருக்கும் இதில் பாத்தியம் இல்லை. (3) தேவஸ்தானம், பண்ணை, கொள்கிரயம், சேறுதேட்டு ஆயம், சுங்கம், சாயவேல், உப்பளம், சத்திரங்கள், மடம் இவைகள் எல்லாம் என்னால் கிரயத்துக்கு வாங்கப்பட்டன. நானே அனுபவித்து வருகிறேன். இந்தச் சொத்துகளில் எல்லாம் யாருக்கும் எவ்விதமான பாத்தியமும் இல்லை. நானும் என் வாரிசுகளுமே என்றும் உரிமையான பாத்தியமுடையவர்கள். (4) மேலே கண்ட சொத்துகளை நான் என் சுயார்ச்சிதமாய்க் கஷ்டப்பட்டுச் சம்பாதித்திருக்கிறேன். அவைகளை என் வாரிசுகளுக்கே கொடுக்க வேண்டும். நான் பாஞ்சாலங் குறிச்சிக் கட்டபொம்மு துரைக்கும், ஊமைத்துரைக்கும் உதவி செய்யவில்லை; இடம் கொடுக்கவும் இல்லை. (5) என்னால் கட்டப்பட்டிருக்கிற சத்திரங்களுக்கும், கோவில்களுக்கும், ஆலயங்களுக்கும் விடப்பட்டிருக்கிற தஸ்தாவேசுகளில் கண்ட சொத்துகள் யாவும் அவரவர்களே அனுபவிக்கும்படி செய்ய வேண்டும். (6) என் தம்பி சின்னமருது சேர்வைக்காரனுக்கும் எனக்கும் தாய் ஒருத்தி, தகப்பன்மார் இருவர். மேற்படியானுக்கு ஜமீனில் யாதொரு பாத்தியமும் இல்லை; மேற்படியானை மானேஜராக வைத்திருந்தேன்; அவன் பாஞ்சாலங்குறிச்சிக் கட்டபொம்மு ஊமைத்துரைகளுக்கு அடைக்கலம் கொடுத்துக் காத்ததாகச் சொல்கிறதைத் தவிர எனக்கு யாதொன்றும் தெரியாது. (7) நான் கிஸ்திப் பாக்கியை நிறுத்தாமல் செலுத்தி வந்திருக்கிறேன். என் தம்பி சின்ன மருது சேர்வைக்காரனை மூன்று நாளைக்கு முன் நீங்கள் துக்கிலிட்டதால், என்னைத் தூக்காமல் நிறுத்தி வைக்கக் கூடாது. நான் யாதொரு பாவமும் தெரியாதவனாயிருந்தும், கம்பெனியாருக்கு யாதொரு பொல்லாங்கும் செய்யாதவனாயிருந்தும், என்னை வலத் தொடையில் துப்பாக்கியினால் சுட்டுவிட்டதனால் என்னையும் தூக்கிலிட வேண்டுவது அவசியமாயிருக்கிறது. (8) அப்படிச் செய்யாமை தரும சாஸ்திரத்திற்கும் ஏற்காது. நான் கழுத்தில் கயிறு போட்டுக் கொள்கிறேன். சிவபெருமானே, கேட்கவும், கம்பெனியாரவர்கள் என்னை அநியாயமாய்த் தூக்குகிறபடியால், என்னுடைய ஜமீன் பூராச் சொத்துக்களையும் வேறே யாருக்காவது கொடுத்தாலும், ஜமீனை ஆளுகிற எவர்களும் விருத்தியடையாமல் போவார்களாக சிவபெருமானே, நீ வரம் கொடுக்க வேண்டும்.