பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 212 (9) என்னுடைய வாரிசுகளைத் தருவித்து என் ஜமீனைக் கொடுக்க வேண்டும்; என்னுடைய ஜமீன் சொத்துகள் யாவும் என் சந்ததிகளுக்குக் கொடுத்துவிடுவதாகவும், நான் அமைத்து இருக்கிற தரும நிலையங்களுக்கு நான் ஏற்படுத்தியிருக்கிற பிரகாரம் யாவும் ஒழுங்காக நடத்தி வருவதாகவும் நீங்கள் இப்பொழுது எனக்கு உறுதி மொழி தர வேண்டும். அதற்கு அத்தாட்சியாக, கவர்ன்மென்டு கத்தியைப் போட்டுத் தாண்டி நீங்கள் சத்தியம் செய்து தர வேண்டும். இது சத்தியம் (10) என் வாரிசுகளின் விவரம்; என் மனைவியின் பெயர் ராக்காத்தாள் அவள்தான் பட்டஸ்திரி, அவளுக்கு ஒரு மகள் உண்டு. அவள் பெயர் மருதாத்தாள். (11) நானும் என் மூத்த சமுசாரமும் சிறுவயலில் இருந்தோம்; அவள் பிரசவத்திற்காக அவளுடைய தகப்பனார் ஊராகிய அரசனேந்தல் அரண்மனையில் போயிருக்கிறாள். போய் மூன்று மாத காலமாகிறது. (12) இரண்டாம் மனைவி பெயர் கருப்பாயி ஆத்தாள். மேற்படியாளுக்குக் கறுத்தையா என்ற ஒரு மகனும், கண்ணாத்தாள் என்ற ஒரு பெண்ணும் உண்டு. இரண்டு பேருக்கும் சந்ததி இல்லை. அவள் மூத்துர் அரண்மனையில் இருக்கிறாள். (13) மூன்றாம் மனைவியின் பெயர் பொன்னாத்தாள். அவளுக்குச் சந்ததி இல்லை. (14) நாலாம் மனைவியின் பெயர் ஆனந்திபாய். அவளுக்கு ஒரு பெண் குழந்தை உண்டு. (15) ஐந்தாம் மனைவியின் பெயர் மீனாட்சியாத்தாள். அவள் அந்நிய ஜாதி; அவளுக்கு ஒரு பெண் குழந்தை உண்டு; அவள் இப்பொழுது கவுண்டன் கோட்டை அரண்மனையிலிருக்கிறாள். (16) எனக்குச்சிவகங்கை ஜமீனை உயில் சாஸனம் செய்து கொடுத்த முதல் மனைவி வேலுநாச்சி இறந்து ஒரு வருஷம் ஆகிறது. அவளுக்குச் சந்ததி இல்லை. (17) என்னுடைய வாரிசுகளைக் கம்பெனியார்களாவது, எனக்கு விரோதிகளாவது, யாதோர் இமிசையும் செய்யாமல் இருக்கும்படி கேட்டுக் கொள்ளுகிறேன். முருகன் துணையாகவும் ஆகாசவாணி பூமாதேவி சாட்சியாகவும் நான் என் கழுத்தில் கயிறு போட்டுக் கொள்கிறேன். மேலே சொன்னபடி நீங்கள் கத்தியைப் போட்டுச் சத்தியம் செய்து கொடுத்ததை நான் நேரில் பார்த்துக் கொண்டேன்.