பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. எல்லோராக் கைலாயர் இன்று இந்திய நாட்டிலே இமயத்தின் சிகரத்திலே அண்டை நாட்டுச் சீ ன ன் ஆக்கிரமிப்புச் செய்கிறான். அவனை முறியடிக்க பாரத மக்கள் அனவைரும் திரண்டு எழுகின்றனர். இதேபோல எவ்வளவோ காலத்திற்கு முன்பு, அந்த இதிகாச காலத்திலேயே இமயத்தையே பெயர்த்து எடுக்க ஒரு முயற்சி நடந்திருக்கிறது. அப்படி முயற்சி செய்தவன் தசமுகன் என்னும் பத்துத் தலை இராவணன், அவன் எப்படித் தன் முயற்சியில் தோற்றான் என்பது ரசமான கதை. கதை இதுதான். ஒரு நாள் கைலாயத்தில் கைலாய நாதனான பரமேஸ் வரன் பார்வதியோடு உல்லாசமாக இருந்திருக்கின்றார். அச்சமயத்தில் இராவணன் அப்பக்கம் வந்திருக்கிறான். எதைக் கண்டாலும் அதைப் பெயர்த்து எடுக்கும் தோள்வலி பெற்றவன் அல்லவா? அதனால் தன் தோளில் ஏற்பட்ட தினவைத் தீர்க்க, அந்த கைலைமலையையே பெயர்த் தெடுக்க எண்ணியிருக்கிறான். மலைக்கு அடியிலே கையைக் கொடுத்து மலையையே பெயர்த்தெடுக்க ஒரு அசைப்பு அசைக்கிறான். மலையும், மரனும் மாணிக்கக்கற்பாறைக ளுமே ஆட்டம் கொடுத்திருக்கிறது. பார்வதியே இந்த நிலை குலைவினால் அஞ்சுகிறாள். அந்த அச்சம் காரணமாக தன் பக்கத்தில் இருந்த இறைவனை அப்படியே கட்டிப்பிடித்துக் கொள்கிறாள். மோனத் தவத்திலிருந்த இறைவன் விஷயத்தை அறிகிறான். தன் வலது கால் கட்டை விரலால் மலையை ஒர் அழுத்தி அழுத்துகிறார். அவ்வளவுதான். தசகண்ட ராவணன் மலையின் அடியிலேயே அகப்பட்டுக் கொள்கிறான். அவன் தலை நொறுங்குகிறது. விழி பிதுங்கு கிறது. இந்த நிலையில் ராவணன் தான் தப்ப ஒரு வழிதேடு கிறான். அவனுக்குத் தெரியும், இன்னிசையாய் இசைப்