பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

239 பயனாய் விளங்குபவன் இறைவன் என்று. உடனே தன் தோளில் கிடந்த வீணையை எடுத்து மீட்டி அதில் சாம் கானத்தை இசைக்கிறான். அவ்வளவுதான். அந்த இசையில் மயங்குகிறார் இறைவன். ஊன்றிய விரலின் அழுத்தம் குறைகிறது. உடனே தப்பினோம் பிழைத்தோம் என்று: ராவணன் எழுந்து மீசையில் ஒட்டிய மண்ணை உதறி விட்டு ஓடிவிடுகிறான். இந்த வரலாற்றை கவிஞர்கள் பாடு கிறார்கள், பக்தர்கள் போற்றுகிறார்கள். 'மருஉற்ற மலர்க்குழலி மடவாள் அஞ்சமலை துளங்கத் திசைநடுங்கச் செறுத்து நோக்கி செரு உற்றவாள் அரக்கன் வலிதான் மாளத் திருஅடியின் விரல் ஒன்றால் அலற ஊன்றி' யதை நாவுக்கரசர் அழகாகப்பாடி மகிழ்கிறார். இப்படி அப்பர் பாடி மகிழ்ந்ததையே தமிழ்நாட்டுக் கலைஞன் ஒரு வனும் கண்டு மகிழ்ந்திருக்கிறான். அவன் கண்ட காட் சியையே அற்புத சிலைவடிவாக அமைத்து அந்தப் பழை யாறைக் கோயிலிலே நிறுத்தியும் வைத்திருக்கிறான். இப்படி சோழர் மன்னர் கட்டிய பழையாறையிலே சிலை வடிவில் உருவான அரியதொரு கற்பனையே, வடநாட்டில் விந்தியத்திற்குத் தெற்கே எல்லோராக் குடைவரையிலும் உருவாகியிருக்கிறது. அக் குடைவரை யையே கயி லாய நாதர் கோயில் என்கின்றனர். அக் கயிலாய நாதர் கோயில் குடைவரையையும் உள்ளடக்கிய பிரம்மாண்டமான கலைக்கோயில்களான குடைவரை களைக் காணவே நாம் இன்று எல்லோரா செல்கிறோம். எல்லோரா இன்றைய மகாராஷ்டிர ராஜ்ஜியத்தில் அவுரங்காபாத் அருகில் இருக்கிறது. பம்பாயிலிருந்து செல் வோர் மண்மாட் ஸ்டேஷனில் வண்டி மாற்றி அவுரங்காபாத் சென்று சேர வேண்டும். தெளலதாபாத்