பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

347 கிடையாதா என்றுதானே கேட்கிறீர்கள். சரி விரைந்தே சென்று ஜகதீசன் கோயிலைக் காண்போம். இக்கோயில் அரண்மனைக்குச் செல்லும் வழியில்தான் இருக்கிறது. எழுபத்தி ஐந்து லட்சம் ரூபாய் செலவில் மகாரானா ஜகத்சிங் என்பவர் 1650-ல் இக்கோயிலைக் கட்டி முடித் திருக்கிறார். இருபத்தி ஐந்து அடி உயரத்தில் உள்ள மாடத் தில் எண்பதடி உயரத்தில் கட்டப் பெற்றிருக்கும் கோயில் அது. முப்பத்திரண்டு படி ஏறியே அம்மாடக் கோயிலுள் நுழையவேண்டும். கோயில் சுவர்களில் எல்லாம் நுணுக்க மான வேலைப்பாடுடன் சிற்ப வடிவங்கள். கோயிலின் கருவறையிலே சதுர்புஜத்தோடு கூடிய மகாவிஷ்ணு, ஜகதீசர் என்ற பெயரோடு நிற்கிறார். ஜகத்சிங் கட்டிய கோயிலில் ஜகதீசன் வந்து குடியேறி இருப்பது பொருத்தம் தானே. இன்னும் இந்த உதயபுரியில் முப்பதுக்கும் மேற்பட்ட சமணக் கோயில்கள் இருக்கின்றன. அவை களில் இரண்டு பிரசித்தமானவை. ஒன்று சீத்தல் நாதருக்கும் மற்றொன்று வாசுபூஜ்யருக்கும் அமைந்தவை. இவர்கள் இருவருமே மகாவீரரது வடிவங்கள்தாம் என் கின்றனர். பளிங்கு கற்களாலும் வர்ணக் கண்ணாடி களாலும் அலங்கரிக்கப்பட்டு அழகோடு விளங்குகிறது. இக் கோயில்கள் இரண்டும். என்ன இங்கு சிவபெருமானுக்குக் கோயில்களே இல்லையோ என்றுதானே கேட்கிறீர்கள்? சிவ பெருமானைக் கண்டு தரிசித்து வணங்கக் கொஞ்சம் வடக்கு நோக்கி செல்லவேண்டும். உதயபுரியிலிருந்து 12 மைல் சென்றால் ஏகலிங்கநாதர் கோயில் வந்து சேருவோம். இந்த ஏகலிங்கநாதர்தான் மகாராணாக்களின் வழிபடு தெய்வம். பலதடவை முகம்மதிய படை எடுப்பிற்கு உட் பட்டிருக்கிறது. இடிக்கப்பட்டிருக்கிறது. கடைசியாக மகாராணா பாப்பாராவால் என்பவர் கட்டிமுடித்திருக் கிறார். கோயில் சதுர்முக சிவன் மிக்க அ ழ க ா க கருப்புச் ச ல ைவ க் க ல் லி ல் உருவாகியிருக்கிறார்.