பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 நாள் முழுவதும் பூசை நடந்து கொண்டே இருக் கிறது என்றாலும், மாலை 7 மணிக்கு நடைபெறும் ஆரத்திக்கே பக்தர்கள் பலர் வருகின்றார்கள். இரண்டு மாடியாக கோயில் அமைந்திருக்கிறது. அதில் கருவறைக்கு மேலே சிகரம் ஓங்கி உயர்ந்திருக்கிறது. ஏகலிங்கரையும் வணங்கிய திருப்தியுடனேயே திரும்பலாம். இதே வழியினைத் தொடர்ந்து வடக்கு நோக்கி இன்னும் பதினெட்டு மைல் போனால் நாதத்துவாரம் என்னும் இடத்திற்கு வந்து சேரலாம். இங்கு செல்வதற்கு ரயில்வசதி பஸ்வசதி எல்லாம் உண்டு. இது ஒரு சிறந்த வைஷ்ணவத் தலம், இங்கு கோயில் கொண்டிருப்பவர் பூரீநாதர். இவர் கரிய வடிவினர். இருந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார். இவர் பிருந்தாவனத்திலிருந்து வந்த கோவர்த்தனதாரி என்று கதை. நமக்குத்தான் தெரியுமே. நந்தகோபன் மாளிகையில் கண்ணன் வளர்ந்து வந்தபோது கோகுலத்து யாதவர்கள் இந்திரவிழா நடத்தியிருக் கிறார்கள். இந்த விழா முறைப்படி நடக்கவில்லை என்று இந்திரனுக்கு கோபம். அவன் பெருமழை பெய்யும்படி மேகங்களை ஏவியிருக்கிறான். மழையைத் தடுக்கவும் கோகுலத்து யாதவர்களைக் காக்கவும், கண்ணன் கோவர்த்தன மலையையே குடையாகத் துரக்கிப் பிடித் திருக்கிறான். அந்த கோவர்த்தனனையே பிருந்தாவனத் திலிருந்து பூரீவல்லிபாச்சாரியார் மேவாருக்கு கொண்டு வந்திருக்கிறார். வருகிற வழியில் சின்ஹாத் என்ற பழைய ஊரில் கோவர்த்தனன் வந்த வண்டி நின்று விட்டது. ஆதலால் அங்கேயே கோவர்த்தனனை பூரீநாதர் என்ற பெயரில் வல்லபாச்சாரியார் பிரதிஷ்டை செய்திருக்கிறார். அந்த இடமே நாதத்துவாரம். நாதத் துவாரம் என்றால் ரீநாதர்கோயில் செல்லும் வாயில் என்றுதான் அர்த்தம். இங்கு பூரீவல்லபாசாரியார், ஆஇை. முறைகளை ஒழுங்கு செய்திருக்கிறார். அவருடைய சந்த்தியார் இன்றும் கோயிலில் ஆதிக்கம் செலுத்திக்