பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(கவியரசர் முடியரசன் - T யார் ? அப் பெரியார் திருவள்ளுவர் என்பதை யாவரும் அறிவர். இப் பெருமகனாரின் பெயர்க் காரணம் பற்றிப் பலரும் பல வகையாகக் கூறுவர். ஆனால் இந்த ஆராய்ச்சியாளர் கூறுங் காரணம் தனியானது. ஆராய்ச்சி யறிவின் ஆழத்தைப் புலப்படுத்துவது. அக் காரணத்தை நீயும் தெரிந்து கொண்டால், இவ்வரிய ஆராய்ச்சிக்குக் கைம்மாறாக எதை வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்ற எண்ணமே தோன்றும். ஆராய்ச்சியைப் பார். "வள்ளுவர், அடிக்கடி வள் வள் என்று கத்திக் கொண்டிருந்ததால் இவருக்கு இப்பெயர் வந்தது' என்னுங் கருத்துப்பட எழுதியிருக்கிறார் ஆராய்ச்சியாளர். உள்ளங் கொதிக்கிறதா உனக்கு ? உன் இனத்தவன் தானே இன்னும் பணங்கொடுத்து வாங்கி வளர்த்துக் கொண்டி ருக்கிறான் இத்தகைய புல்லிதழ்களை, அவனுக்கு மனங் கொதிக்கவில்லையே! வேடிக்கையாக எழுத விரும்பினால் தந்தையையும் பாட்டனையுமா ஏளனப் பொருளாக வைத்துக் கொண்டு ாழுதுவது? முறை வேண்டாவா ? எழுதுவோர் எண்ணிப் பார்க்க வேண்டாவா ? வாங்குவோர்தாம் சிந்திக்க வேண்டாவா ? பொறுமை பொறுமை என்று பேசி வருந் தமிழகம் இன்னும் எத்து னை நாள் பொறுத்துக் கொண்டிருக்கப் போகிறதோ ? மற்றொரு கொடுமையைப் பார். தமிழ் தனித்தியங்குந் தன்மையது. பிறமொழிச் சொற்களைக் கலந்தெழுதினால் தமிழ் கெட்டுவிடும் என்றெல்லாம் அறிவுடைய