பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 -அன்புள்ள இளவரசனுக்கு ெ பெருமக்கள் கருதுகின்றனர். இத்துறையில் ஒரளவு விழிப்புணர்ச்சியும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கவிஞர் என உலாவரும் ஒருவர், நூலொன்று வெளியிட்டார். அந்நூலுக்குப் பெயர் புஷ்பமாலிகள்’ என வடமொழியில் வைக்கப்பட்டுள்ளது. அந்நூ லுக்கு முன்னுரை எழுதிய பெருமகனார், பெயர் சூட்டிய பெருமையைப் பெரிதும் பாராட்டி எழுதியுள்ளார். அப்பாராட்டு நமக்கு வருத்தத்தைக் கொடுக்க வில்லை. எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்ட அவருக்கு உரிமையிருக்கிறது. அதில் தனித் தமிழ் இயக்கத்தைக் கிண்டல் செய்யும் முறைதான் நமக்கு ஆறாத்துயரைத் தருகிறது. இதோ அவர் எழுதியிருப்பதைப் பார். "தனித்தமிழ் என்கிற மொழிச்சிக்கலாகிய மலச்சிக்கல்” என்னும் வகையிலே எழுதியிருக்கிறது அந்த ஆசிரியர் கை. அந்தக் கை எத்தகையது ? தமிழை எழுதுங் கை; தமிழை எழுதிப் பணம் வாங்குங் கை. அப் பணத்தாற் சோறுண்ணுங் கை. அந்தக் கையிலிருந்துதான் வருகிறது அந்த மலச்சிக்கல். நன்றி கெட்ட பிறவிகள். தம் புகழு க் காக, உயர் வுக் காக, நன்றி கெட்ட பிறவிகள் தமிழ் மொழியையும் தமிழினத்தையும் ஏளனம் செய்யும் இவர்களும் தமிழர்களாம்; இப் படி ஏ எானம் செய்வதைப் பார்த்து பின்னரும் தமிழ் மகனுக்குச் சூடு, சுரனை தோன்ற வில்லையென்றால் அவனை என்னென்று சொல்வது ? என்று தான் உணர்ச்சி பெறுவானோ தெரியவில்லை. உன் தந்தை முடியரசன்