பக்கம்:நாள் மலர்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்த்திதழ் செந்தமிழ் நாடு செய்த தவத்தால் வந்த வாய்மைசேர் முதல மைச்சரே, தாய்மை மிக்க காமராசரே. வருக தங்கள் வருகை நன்றாக! மட்டிலாக் காரியம் மலிந்திருக் கையிலும் எம் முட்டறாம் பட்டில் முகந்திருப் பியதை நாங்கள் மறவோம்! செய்த நன்றியை என்றும் நினைப்போம் வணக்கம் ஏற்க. முதுவிழுப்புரத்து முட்றாம் பட்டு மண்ணுள் ஓடும் தண்ணீர் எடுக்கும் மின்சார வசதி இல்லை! விளைச்சல் மங்கி வறுமை மிகுதியாயிற்றே! அழகு விக்கிற வாண்டி அணையினின்று எம்முட்டறாம்பட்டின் ஏரி வரைக்கும் ஏறத் தாழ பதினா றேரிகள். ஆயினும், அங்குள மெயின் வாய்க் காலே முப்ப தாண்டுகள் முடிந்தும் இன்றுவரை வெட்டப் பட்டதே இல்லை மெய்இது ! சூழ்ந்துள்ள நிலங்கள் வாழ்வ தெப்படி? உரைக்கும் இப்பிர்க்கா ஓரூரினின்றே ஓரூர் செல்ல பாதைகள் உண்டா? இல்லவே இல்லை. இன்னல் அடைகின்றோம் எங்கள் முதல்வராய் நீங்கள் இருக்கையில் இக்குறை தீர்க்கப்படாவிடில் இனியாம் திக்கிலாது திகைக்க வேண்டும். 25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாள்_மலர்கள்.pdf/27&oldid=1524802" இலிருந்து மீள்விக்கப்பட்டது