தந்தையும் மகளும்/128

விக்கிமூலம் இலிருந்து


128 அப்பா! டீ. டீ. ற்றி. பொடி தூவினால் பூச்சிகள் உண்டாகாது என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! டீ.டீ. ற்றி, (D.D.T.) என்பது ஒரு ரஸாயனப் பொருள். அது மூன்று பெயர்கள் சேர்ந்தது. அவற்றின் ஆங்கில எழுத்துக்களின் முதல் எழுத்துக்களே டீ. டீ. றி. என்பன. அதைப் பொடியாகவும் தயாரிப்பார்கள், திரவமாகவும் தயாரிப்பார்கள்.

அது பூச்சிகளைக் கொல்வதில் அதிகச் சக்தியுடையது. அதைத் துணிகள் மீது தெளித்தால் அந்தத் துணிகளை அடிக்கடி சலவை செய்தாலுங்கூட அவற்றில் இரண்டு மாதகாலம் சீலைப் பேன் பிடியாது. அது நாற்பது ஐம்பது விதமான பூச்சிகளைக் கொல்லக்கூடியது என்று கூறுகிறார்கள். அதைச் சுவரில் தெளித்தால் அந்த அறையிடம் மூன்றுமாத காலம் ஈக்கள் அண்டா. ஆனால் அதை அளவுக்கு மிஞ்சி உபயோகித்தால் அபாயகரமானது.

இந்த மருந்தை முதன் முதலாகத் தயாரித்தவர் ஒரு ஜெர்மன் ரஸாயன அறிஞர். ஆனால் அது உலக மெங்கும் பரவியது 1944-ம் ஆண்டில் அமெரிக்க இராணுவத்தார் உபயோகிக்க ஆரம்பித்த பிறகுதான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/128&oldid=1538331" இலிருந்து மீள்விக்கப்பட்டது