தந்தையும் மகளும்/139⁠

விக்கிமூலம் இலிருந்து


139அப்பா! திரிவிளக்குகளுக்கு மண்ணெண்ணெய்யையே உபயோகிக்கிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! நாம் குத்துவிளக்கில் ஆமணக்கு நெய் ஊற்றி எரிக்கிறோம். அதனாலேயே ஆமணக்கு நெய்யை விளக்கெண்ணெய் என்று கூறுவார்கள். அது கட்டியான எண்ணெய், அது சீக்கிரம் ஆவியாக மாறாது. அதனால் அந்த விளக்கு பிரகாசமாயிராது. அத்துடன் அது நாறவும் செய்யும். மற்ற எண்ணெய்களை ஊற்றினாலும் வெளிச்சம் குறைவாகவே இருக்கும்.

ஆனால் மண்ணெண்ணெய் அதிகச் சீக்கிரமாக ஆவியாக மாறக்கூடியது. அதனால்தான் அதன் வெளிச்சம் பிரகாசமாயிருக்கிறது. அத்துடன் அந்த விளக்குகளில் காற்று அளவாக வரும்படி அடியில் சிறு துவாரங்கள் இருப்பதாலும், சிமினி இருப்பதாலும், திரியை அளவாக எரியும்படி நாம் அதை ஏற்றவும் இறக்கவும் கூடியதாக இருப்பதாலும் அந்த விளக்கைச் சரியாகக் கவனித்து எத்ரிதால் புகை உண்டாகாது, நாறாது.

அதனால்தான் மற்ற எண்ணெய் விளக்குகளை நீக்கி விட்டு மண்ணெண்ணெய் விளக்குகளை உபயோகிக்கிறோம். அந்த விளக்கை உபயோகிக்க ஆரம்பித்தது 1860-ம் ஆண்டிலாகும். இப்பொழுது 125 வருஷங்கள் ஆகின்றன. அந்த விளக்கு மறைந்து மின்சார விளக்கு வந்திருக்கிறது. அது அதிகப் பிரகாசமாகவும் இருக்கிறது. நாற்றமென்பது கிடையவே கிடையாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/139⁠&oldid=1538365" இலிருந்து மீள்விக்கப்பட்டது