தந்தையும் மகளும்/151

விக்கிமூலம் இலிருந்து


151அப்பா! தட்டையான திரி விளக்கைவிட வட்டமான திரி விளக்கு அதிகப் பிரகாசமாக எரிகிறதே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! நாம் விளக்கை ஏற்றியதும் திரியில் ஏறி நிற்கும் எண்ணெய் ஆவியாக மாறி எரிய ஆரம்பிக்கிறது, எரிதல் என்பதன் பொருள் யாது? பிராணவாயுவுடன் சேர்தல் என்பதேயாகும். ஆதலால் பிராணவாயு இல்லாவிட்டால் விளக்கு எரியாது, அணைந்துபோகும்.

அதே காரணத்தால் பிராணவாயு அதிகமாகக் கிடைத்துக் கொண்டிருக்குமானால் அப்போது எண்ணெய் ஆவி முற்றிலும் எரிந்து வெளிச்சம் பிரகாசமாய் இருக்கும். தட்டையான திரி விளக்கில் காற்றானது திரியைச் சுற்றியுள்ள சிறு துவாரங்களின் வழியாகவே திரிக்குப் போய்ச் சேருகிறது. ஆனால் வட்டமான திரி விளக்கில் காற்றானது திரியைச் சுற்றியுள்ள சிறு துவாரங்களின் வழியாகவும், விளக்கின் அடியிலிருந்து மேலே திரிக்குப் போகும் துவாரத்தின் வழியாகவும் திரிக்குப் போய்ச் சேர்கிறது அதனால்தான தட்டையான திரி எரியும்பொழுது உண்டாகும் வெளிச்சத்தைவிட வட்டமான திரி எரியும் பொழுது உண்டாகும் வெளிச்சம் அதிகப் பிரகாசமாக இருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/151&oldid=1538425" இலிருந்து மீள்விக்கப்பட்டது