தந்தையும் மகளும்/152

விக்கிமூலம் இலிருந்து


152அப்பா! எண்ணெய் விளக்கு சிறிது நேரம் எரிந்ததும் திரியைத் தட்டிவிடவேண்டியிருக்கிறதே, அதற்குக் காரணம் என்ன?

ஆம், அம்மா! அப்படித் திரியைத் தட்டி விடாவிட்டால் விளக்கு நன்றாக எரியாமல் வெளிச்சம் மங்கி விடுகிறது. அப்படியே சிறிதுநேரம் விட்டுவிட்டால் ிளக்கு அணைந்துகூடப் போகிறது. அதற்குக் காரணம் என்ன?

அம்மா! விளக்கு ஏற்றியதும் திரியின் நுனியில் ஏறி நிற்கும் எண்ணெய் ஆவியாக மாறி எரிய ஆரம்பிக்கிறது. எண்ணெய்யில் கரி இருக்கிறது. அதுதான் காற்றிலுள்ள பிராண வாயுவுடன் சேர்ந்து எரிகிறது சுடரின் புறத்தே பிராணவாயு அதிகம், அகத்தே குறைவு. அதனால் திரி சிறிது சிறிதாக எரியாமலிருந்து சுட்டியாகி விடுகிறது. அப்படிக் கட்டியானதும் அது எண்ணெய்யை ஆவியாகி எரிய விடாமல் தடுத்து விடுகிறது அதனால் தான் வெளிச்சம் மங்குகிறது. உடனே நாம் திரியிலுள்ள கரியைத் தட்டி விடுகிறோம். அது மறுபடியும் நன்றாக எரிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/152&oldid=1538426" இலிருந்து மீள்விக்கப்பட்டது