தந்தையும் மகளும்/193

விக்கிமூலம் இலிருந்து


193அப்பா! மரஞ் செடிகளில்' இலைகள் வேறு வேறு விதமாக இருக்கின்றனவே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! எந்த உயிருள்ள பொருளைப் பார்த்தாலும் அதன் உறுப்புக்களும் குணங்களும் அது உயிர் வாழ்வதற்கு ஏற்ற வண்ணம் உபயோகப்படுத்துவதற்காகவே அமைந்திருப்பதைக் காணலாம். உதாரணமாக நம்முடைய பற்கள் நாம் உண்ணும் அரிசி முதலிய தானியங்களை மெல்லுவதற்கு ஏற்றவாறும், நாய் முதலிய மாமிச பட்சணிகளுடைய பற்கள் அவை தின்னும் மாமிசத்தை கிழிப்பதற்கு ஏற்றவாறும அமைந்திருப்பதை நீ அறிவாய்.

அது போல் இலைகள் சூரிய ஒளி புகுவதற்கு ஏற்றவாறு மெல்லியனவாயும், சூரிய ஒளியைப் பயன்படுத்தி மாப்பண்டம் தயார் செய்வதற்கு ஏற்றவாறு பச்சை நிறமாயும் அமைந்திருக்கின்றன. அத்துடன் அவை சூரிய ஒளி கிடைக்கக் கூடிய பக்கமாகத் திரும்புவதையும் நீ அறிவாய்.

அது போல் இலைகள் பலவித உருவங்கள் உடையனவாக இருப்பதும் ஏதேனும் ஒரு உபயோகத்துக்கு ஏற்றதாகவே இருக்கும். ஆனால் என்ன விதமான உபயோகம் என்று திட்டமாகக் கூற முடியாதவர்களாயிருக்கிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/193&oldid=1538661" இலிருந்து மீள்விக்கப்பட்டது