தந்தையும் மகளும்/56

விக்கிமூலம் இலிருந்து


56அப்பா! எதையும் குளிர்ந்தநீரைக் கொண்டு கழுவுவதை விடச் சூடான நீரைக் கொண்டு கழுவுவது எளிதாயிருக்கிறதே, அதற்குக் காரணம் என்ன?

ஆம், அம்மா! அதனால் தான் உன் தாயார் சாப்பிட்ட தட்டுகளைச் சுடுதண்ணீர் கொண்டு கழுவுகிறாள். சாப்பிட்ட தட்டில் நெய்யும் எண்ணெய்யும் ஒட்டிக் கொண்டிருக்கும். அந்த எண்ணெய் வஸ்துக்களிலேயே தூசியும் அழுக்கும் அதிகமாக ஒட்டிக் கொள்ளும். சுடுதண்ணீர் கொண்டு கழுவினால் அப்பொழுது சுடுதண்ணீர் தட்டிலுள்ள நெய்யையும் எண்ணெய்யையும் நீர்போல் இளக்கி விடும். அவை தண்ணீருடன் சேர்ந்து போய்விடும்.

எண்ணெய் வெஸ்துக்களில்லாத பாத்திரங்களைக் கழுவ சுடுநீர் வேண்டுமென்பதில்லை. ஆனால் அந்தப் பாத்திரங்களையும் நாம பொதுவாக வெறுங்கை கொண்டே தேய்த்துக் கழுவுவதால் அப்போதும் சுடுதண்ணீர் உபயோகிப்பதே நல்லது. நம்முடைய உடம்பிலேயே ஒருவித எண்ணெய்ப் பசை உண்டாகிறது அல்லவா? அதனால் தானே நம்முடைய உடம்பிலும் தூசிகள் நன்றாக ஒட்டிக் கொள்கின்றன. அதற்காகத்தானே நாமும் நம்முடைய உடம்பைச் சுத்தம் செய்வதற்கு பச்சைப் பயறு பொடியோ சோப்போ உபயோகிக்கிறோம். ஆதலால் எதையும் கழுவுவதற்குச் சுடுநீரே ஏற்றது. அதைக் கொண்டே நன்றாகச் சுத்தம் செய்ய முடியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/56&oldid=1538175" இலிருந்து மீள்விக்கப்பட்டது