தந்தையும் மகளும்/57

விக்கிமூலம் இலிருந்து


57அப்பா! கண்ணாடி டம்ளரை தண்ணீருக்குள் போட்டு வேகவைத்தால் கீறுவதில்லை, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! கண்ணாடி டம்ளரில் சூடான தண்ணீரை ஊற்றினால் டம்ளர் உடைந்து விடுகிறது. அதன் காரணம் யாது? பொருள்களைச் சூடாக்கினால் அவை விரியும் என்றும் குளிர்வித்தால் அவை சுருங்கும் என்றும் அறிவாய். ஆதலால் டம்ளரில் சூடான தண்ணீரை ஊற்றியதும் தண்ணீர் பட்ட இடம் விரியும், மற்ற இடம் விரியாதிருக்கும். அதனால்தான் டம்ளர் கீறிவிடுகிறது.

ஆனால் டம்ளரை நீரில் போட்டு வேக வைத்தால் டம்ளர் ழுழுவதும் விரிகிறது, அதனால் அது கீற மார்க்கமில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/57&oldid=1538176" இலிருந்து மீள்விக்கப்பட்டது