தந்தையும் மகளும்/58

விக்கிமூலம் இலிருந்து


58 அப்பா! மண்ணெண்ணெய் பாட்டிலை எப்பொழுதும் மூடி வைக்கும்படி சொல்லுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

ஆம், அம்மா! மண்ணெண்ணெய் பாட்டிலை மட்டுமில்லை, டிங்சர் பாட்டிலையும், ஸெண்ட் பாட்டிலையும் கூட மூடியே தான் வைத்திருக்க வேண்டும். அதற்குக் காரணம் சொல்லுகிறேன் கேள்.

அம்மா! தண்ணீர், தேங்காய்நெய் போன்ற திரவங்களைக் கொதிக்க வைத்தால் அவை ஆவியாக மாறும் என்பதை அறிவாய். அவை கொதிக்க வைக்காவிட்டாலும். எப்போதும் மெதுவாக ஆவியாகிக் கொண்டுதானிருக்கும். ஈரத்தரை உலர்ந்து போவது அதனால் தான்.

ஆயினும், தண்ணீர் போன்ற திரவங்கள் ஆவியாக மாறுவதற்குக் கொஞ்சமேனும் சூடு அவசியமானதே ஆனால் மண்ணெண்ணெய் போன்றவைகள் ஆவியாக மாறுவதற்கு அவ்வளவு உஷ்ணம் கூடத் தேவையில்லை. அவையுள்ள பாட்டிலைத் திறந்தால் போதும், உடனேயே ஆவியாக மாறி வெளியே போய்விடும். அதனால் தான் அந்தப் பாட்டில்கனை மூடியே வைத்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/58&oldid=1538178" இலிருந்து மீள்விக்கப்பட்டது