தந்தையும் மகளும்/94

விக்கிமூலம் இலிருந்து


94 அப்பா! அப்பளம் பொரிக்கும்போது அது பெரிய குமிழியாக ஆகிவிடுகிறதே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! அப்பளம் செய்வதற்கான மாவை நன்றாகப் பிசைந்து ஒரு சதுரக் கல்லில் வைத்து இடிப்பார்கள். அப்பொழுது அது அதிக மிருதுவாக ஆகிவிடும். அதனால் அதை மெல்லிய அப்பளமாக இட்டால் அத்துடன் காற்று அடைபட்டுப் போகும். அநேகமாக உலகிலுள்ள பொருள்கள் எல்லாம் சூடு சேர்ந்தால் விரியும் தன்மையுடையன என்பதை அறிவாய். அதுபோல் காற்றும் சூடுபட்டால் விரியும் அல்லவா? அதனால்தான் வாணலியில் எண்ணெய்யைச் சூடாக்கி அதில் அப்பளத்தை இட்டதும் அதில் அடைபட்டுள்ள காற்று விரிகின்றது. அப்பளம் குமிழியாக ஆகிவிடுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/94&oldid=1538256" இலிருந்து மீள்விக்கப்பட்டது