தந்தையும் மகளும்/95

விக்கிமூலம் இலிருந்து


95அப்பா! முட்டையைப் படுக்க வைத்து உடைப்பது எளிதாயிருக்கிறது, நிற்க வைத்து உடைப்பது கஷ்டமாயிருக்கிறது, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! முட்டையிடம் இந்த வேறுபாடு காணுவதற்குக் காரணம் அது நீளவாட்டில் வளைவு அகன்றும் அகல வாட்டில் குறுகியும் இருப்பதுதான்.

வளைவு நீண்டும் குறுகியும் இருந்தால் அது தூண் போலவே அதிக பலமுடையதாக இருக்கும். அத்தகைய வளைவு தன் மீது வைக்கப் பெறும் கனத்தைத் தாங்கமுடியும்; கனத்தின் காரணமாக முறிந்து விடாது. வளைவு அகலமாகவும் கட்டையாகவுமிருந்தால் கனத்தின் காரணமாக எளிதில் முறிந்துவிடும்.

முட்டையின் நீளவாட்ட வளைவு அகன்று இருப்பதால் தான் முட்டையைப் படுக்க வைத்து உடைப்பது எளிதாயிருக்கிறது. முட்டையின் அகலவாட்டு வளைவு குறுகி யிருப்பதால் முட்டையை நிற்க வைத்து உடைப்பது கஷ்டமாயிருக்கிறது.

வளைவுகள் சம்பந்தமான இந்த உண்மையை உணர்ந்துதான் கட்டடங்களில் வளைவுகள் உண்டாக்க வேண்டியிருந்தால் உயரமாகவும் குறுகலாகவும் கட்டுகிறார்கள். அப்பொழுது அவை பலமாயிருக்கும்; தம் மீது வைக்கப்படும் பாரத்தைத் தாங்கும், கீறிவிடா.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/95&oldid=1538257" இலிருந்து மீள்விக்கப்பட்டது