தந்தையும் மகளும்/96

விக்கிமூலம் இலிருந்து


96அப்பா! கட்டடங்களிலுள்ள வளைவுகள் விழாமல் இருக்கின்றனவே, அதற்குக் காரணம் என்ன?

ஆம், அம்மா! வராந்தாவிலும் சன்னல்களிலும் வாசல்களிலும் வளைவுகளாகக் கட்டுகிறார்கள். அவை பலமாக இருந்து கொண்டிருக்கின்றன. அதற்குக் காரணம் கூறுகிறேன் கேள்.

அம்மா! மாத்தால் ஒரு வளைவு செய்து அதன் மீது கற்ளை அடுக்கி வளைவு கட்டுவார்கள். அந்தக் கற்களை ஆப்பு உருவமாகச் செய்வார்கள் அவற்றை இரண்டு பக்கங்களிலும் அடுக்கிக் கொண்டுவந்து கடைசியில் உச்சியில் நடுவிலுள்ள கல்லை வைப்பார்கள். அதை வைத்த பின் மர வளைவை எடுத்து விடுவார்கள். கற்கள் எல்லாம் ஒரே கல்போல் உறுதியாக நின்றுகொள்ளும்.

நடுவில் வைக்கும் கல் ஆப்பு உருவமாக இருப்பதால் அது பக்கத்திலுள்ள கற்களை அழுத்தும். அந்தக் கற்கள் அடுத்துள்ள கற்களை அழுத்தும். இவ்விதமாக ஒவ்வொரு கல்லும் மற்றக் கற்களைத் தாங்கிப் பிடிக்கிறது அதனால் தான் நடுவிலுள்ள கற்கள் கீழே விழுந்துவிடாமல் வளைவு அதிக பலமாகவும் பெரும் பாரங்களைப் பொறுக்கக் கூடியதாகவும் ஆகிவிடுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/96&oldid=1538258" இலிருந்து மீள்விக்கப்பட்டது