உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயம் 6 ஜேம்ஸ் இரண்டாவது தம்ளர் தண்ணீரைக் குடித்து முடித்தான். தன் கணுக்காலிலும் விரல் காளிலும் அநேக சிவப்புப் புள்ளிகளை உண்டாக்கி யிருந்த கண்ணுக்குத் தெரியாத ரத்தம் உறுஞ்சும் ஈக்களை அடித்துப் போட்டுக்கொண்டிருந்தான் அவன். அமர்ந்திருந்த அறையின் ஜன்னலுக்கு வெளியே அடிக்கடி அவன் கவனமாக எட்டிப் பார்த்தான். மேஜை மீது தேநீர் தயாரிக்கும் சாமான்கள் கிடந்தன. ஒன்றுடன் ஒன்று பொருந் திச் சுழலவல்ல இரண்டு பாகங்களைக் கொண்ட ஒரு பழைய மின்சார விசிறி, உயரத்தில் அமைக்கப்பட் டிருந்த தண்டியக் கட்டையிலிருந்து சுற்றியபடி, உஷ்ணக் காற்றை மெதுவாக, ஆனால் வழி முறைப் படி அள்ளி வீசியது. அது தெருவிலிருந்து வந்த ஈக்களின் ரீங்கார சத்தத்தை விட்டுவிட்டு மறைத் துக் கொண்டிருந்தது. வேண்டுமென்றே அமைதி யுடன் கிராம மக்கள் அவ்வழியே அடிக்கடி கடந்து சென்ருர்கள். காய்ந்த வெயிலில் அவர்களின் மேல் சட்டைகள் அவர்களுடைய உடம்புகளில் ஒட்டிக் கொண்டிருந்தன. ஒரு பறவைகூடச் கீச்சிடவில்லை; ஓர் இலை அசையவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/151&oldid=752713" இலிருந்து மீள்விக்கப்பட்டது