உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153


வாலிபப்பருவம் கடந்து தேய்ந்த வாழ்க்கையின் எல்லையில் நிற்பவனைப் போல த் தோன்றச் செய்தன. கோடைகால மேலங்கி, தோள்களுக்குக் கீழே குழிவுடன் கூடிய அவனது மெலிந்த உட லமைப்பை எடுத்துக் காட்டியது. அவன் பேசிய போது அவன் குரல் மென்மையாகவும் அமைதியாக வும் இருந்தது; துயரத்தின் வழக்கமான குறிப்பை அவனுடைய கண்கள் மட்டும் வெளிப்படுத்தின. "இவன் என் சகோதரன் பிள்ளை. இளைய ஸ்ப்ரெளட்,” என்ருள் ஈஸ்-. பத்து வயசுப் பையன் அவன். சிறிய உருண்டை யான முகமும், மிகப் பெரிய கரிய விழிகளும் கொண் டிருந்தான். அவன் தன் தாத்தாவுடன் சதா ஒடிக் கொண்டிருந்தான். போதிய போஷாக்குடன் ஆரோக்கியமாகத் தோன்றினன், ரோஜா நிறக் கன்னங்கள் அவனுக்கு இருந்தன. "இவன் என் பேரன்,” என்ருன் டுவான்; ஆரோக்கியம் இழந்திருந்த அவன் முகம் சுருங்கியது. புன்னகை தெரிந்தது. பேரன், என்ற சொல்லில் அபூர்வமான அழுத்தம் கொடுத்து அதைத் தனிக் குரலில் உச்சரித்தான் அவன். டுவான் உயிர் தரித் திருந்ததற்குப் பொருள் கொடுத்த அவனது நம்பிக் கைகள், வாழ்க்கை முதலான அனைத்துமே அந்தப் பையனிடம் நிலவிக்கிடந்தன. அவன் பெற்றேர்கள் இறந்ததிலிருந்து அவ னுடைய பாட்டன்தான் அவனைப் பத்திரமாகக் கவனித்துக்கொண்டு வந் தான். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/153&oldid=1274898" இலிருந்து மீள்விக்கப்பட்டது