உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154


சிறுவன் ஸ்ப்ரெளட் தன்னுடைய தொடை களுக்குக் கீழே கைகளை வைத்துக்கொண்டு சோபா வில் உட்கார்ந்து உற்றுக் கேட்டான். அதுவே அவன் பயிற்சி. பெரும்பாலான சீனக் குழந்தைகளை காட்டிலும் அவன் சுத்தமாகக் குளிப்பாட்டப்பட்டு உடுத்திருந்தான்; அவனுடைய விரல் நகங்கள் துப்புரவாக இருந்தன. முக்கியமாக இது ஈஸாவின் அலுவலாக இருந்தது. அவனிடம் கூச்சம் இல்லை. மற்ற பிள்ளைகளைப் போலவே அவனும் இயற்கைத் தன்மையுடன் இருந்தான். அவன் அந்த வெள்ளை மனிதனைத் தமாஷாகவும் ஆச்சரியமாகவும் குதுகல மாகவும் விறைத்துப் பார்த்தான். "இவன் வாலிபர் கூட்டுறவு சங்கத்தில் இருக் கிருன். கணக்குப் போடுவதில் அவன் வெகு வேகம்: இப்போதெல்லாம் அவர்கள் பள்ளிகளில் அதிகம் படிப்பதில்லை. நான் அவனுக்கு வீட்டில் கற்பித்துக் கொடுக்கிறேன்." தன் குழந்தையை டாக்டரிடம் எடுத்துச் செல்கையில் கேட்கப்படுவதற்கு முன்பே எல்லா விவரங்களையும் கூறிவிடும் தாய்போல டுவான் இவ்வாறுபேசினன். ஈஸுவுக்கு அடுத்து ஜேம்ஸ் அமர்ந்திருந்தான். மற்றவர்கள் சோபாவில் உட்கார்ந்திருந்தனர். ஜேம்ஸ் தன்னை முறைத்துப் பார்த்ததை உணர்ந்த ஈஸுவின் முகம் நாணத்தால் சிவந்தது. தன் காத லனைத் தவிர ஸிஸ்டர் ஆங்கேலிகாவையும் மற்றவர் களையும் அவள் உற்றுப் பார்த்தாள். அவளது நாசித் துவாரங்கள் சுருங்கி விரிந்தன. கூச்சத்தோடு அவள் புன்னகை செய்தாள். அவளும் தன்னுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/154&oldid=1274899" இலிருந்து மீள்விக்கப்பட்டது