உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155


சகோதரர் மகனைப் போலவே உட்கார்ந்தாள் கைகள் இரண்டையும் அவளைப்போலவே வைத்திருந் தாள். அவளுடைய அரைக்கை மேலங்கி வெண்மை யான, இரு புஜங்களும் மனைவியாகவும் தாயாகவும் ஆவதற்குத் தயாராக இருக்கும் முதிர்ந்த பெண் ணின் புஜங்களை நினைவூட்டின. ஈஸாவின் தந்தையோடு ஜேம்ஸ் பேசிக்கொண் டிருந்தான்; ஆனல் அவன் கண்கள் ஈஸ்ாவைச் சுற்றியே சதாவட்டமிட்டன. கள்ளத்தனமாக அவளுடைய கழுத்தின் பின்பகுதியில் கெஞ்சுத லுடன் சீராட்டி, நிமிண்டி விளையாடினன். இந்த அழகிய பெண்ணை தன்வசப்படுத்தி வைத்திருந்ததில் பெருமிதமும் பூரிப்பும் கொண்டான். “உங்களுக்கு ஆசைவெறிமூண்டு விட்டதா?” என்று ஈஸ் இனிமையாக அவளைக் கண்டித்தாள். "ஊஹாம்; புத்தி தப்பிவிட்டது.” புன்சிரிப்போடு ஈஸ் தன் உதட்டைக் கடித்துக் கொண்டாள். விளையாட்டுத்தனமான இளம் காத லர்களின் ஜோடியைப் பார்த்து ஆங்கெலிகா மனம் பூரித்தாள். ஈஸ்வின் தந்தை, தனது எதிர்கால மாப்பிள்ளையின் குணங்களை ஆராய்ந்துகொண் டிருந்தான். . "மிஸ்டர் டுவான், நான் உங்களுக்கு நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளேன்!” - "எதற்காக?" 'எனக்கு உங்கள் புதல்வியைக் கொடுப்பதன் மூலம், என் வாழ்க்கையில் அன்போடும் மரியாதை யோடும் மதிக்கத்தக்க ஒருபொருளை நீங்கள் எனக்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/155&oldid=1274900" இலிருந்து மீள்விக்கப்பட்டது