உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183


"ஆமாம்! இதுதான் என் மனத்துக்கு மிகுந்த இதமாக இருக்கிறது” என்ருன் ஃபான், சீன வழக் கப்பிரகாரம் பணம் சம்பந்தமான பேச்சு கைவிடப் பட்டது; ஆனலும், தன் சேவை பலன் பெருமல் போகாது என்பதை அவன் நன்கு உணர்ந்தான். போன் ஒரு கண்டிப்பான வியாபாரி. ஆனலும், ஒரு கத்தை கரன்ஸி நோட்டுக்களைப் பார்க் கிலும் சிறந்த நட்பு அதிகப் பயனுள்ளதாக இருக் கும் என்பதை அவன் அறிவான். அவன் தேநீரைப் பருகினன்; புறப்பட எழுந் தான். "எங்கே புறப்பட்டுவிட்டீர்கள், ஷெக்டின்?.... இப்போது போகவேண்டாம்” என்ருன் டுவான். ஃபான் ஷெக்டின் ஈஸ்வின் பக்கமாகத் திரும் பினன். 'எனக்கு மற்ற அலுவல்கள் இருக்கின்றன. நீங்கள் ஒவ்வொரு வ ரு ம் இடுப்பைச் சுற்றி அணியும் கச்சை தயார் செய்து கொள்ளுங்கள். ஆமாம், ஜேம்ஸ்"க்கும் கூடத்தான், கச்சைகளின் அகலம் சுமார் ஐந்து அங்குலம் இருக்கட்டும். உங்க ளால் முடிந்த அளவுக்கு வறுத்த அரிசி தயார் செய் யுங்கள். நமக்குக் கிடைக்கக்கூடியது அவ்வளவுதான். கிடைக்கும் இடத்தில் தண்ணிர் குடிப்போம் மூட்டை முடிச்சு எதுவும் கூடாது; ஞாபகமிருக்கட் டும். சிறிய துணி முடிச்சுமட்டும் எடுத்துக் கொள் ளுங்கள். போர்வை கொண்டு போக முடியாதாகை யால், உங்களுக்கு இரவில் ஒரு கோட் தேவைப் படும். எல்லையில் போலீஸ் நாய்களை மந்திரவித்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/183&oldid=1274921" இலிருந்து மீள்விக்கப்பட்டது