பக்கம்:இலட்சிய பூமி.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184


போன்று ஆட்டிப் படைக்கக்கூடிய ஒரு அதிசய மருந்து நாளை எனக்குக் கிடைக்கும். அது நாயை ஐம்பது கஜத் தொலைவிலேயே மயங்கச் செய்து துரங்க வைத்துவிடும்.” “என்ன மருந்து அது?’ என்ருள் ஈஸ்". ஃபான் மெல்லச் சிரித்து மழுப்பிவிட்டான்; அதைச் சொல்லமாட்டேன்; 'எங்கள் ஆட்கள் பல முறை சோதித்துப் பார்த்துவிட்டார்கள். அது அற்புதமாக வேலை செய்கிறது” என்ருன். “எங்களிடம் அதைச் சொல்லக் கூடாதா? என்று அவள் கேட்டாள். - 'மருந்து கைக்குக் கிடைத்தவுடன் பெயரைச் சொல்கிறேன். இயற்கை தந்த மருந்து அது’ 'சரி ஜேம்ஸின் துப்பாக்கி உங்கள் வசம் வந்து விட்டதா? இதை அறிந்துகொள்ள அவர் மிகவும் ஆவலுடன் இருப்பார்” என்று தெரிவித்தாள் ஈஸா. ஃபான் வியப்புடன் முறுவல் பூத்தான். "துப் பாக்கி என்னிடம்தான் இருக்கிறது என்று அவரிடம் சொல்லுங்கள். பாவம், அசாயைக் கைது செய்து விட்டார்கள். அதுபற்றி என்ன செய்ய வேண்டு மென்பதைக் கவனிக்க வேண்டும்" என்ருன் அவன். கேட்டுக் கொண்டிருந்தவர்களின் முகங்களில் பயம் குடிகொண்டது. சிறுவன் ஸ்ப்ரெளட்டுக்கு அசாய்தான் போர்வீரன்; அவன் கலங்கினன், அச்ச மடைந்தான்! அவன் ஏன் கைது செய்யப்பட்டான்? அவ னுக்கு உதவி செய்யுங்கள். தயவு செய்து உத வுங்கள்!" என்ருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/184&oldid=1274922" இலிருந்து மீள்விக்கப்பட்டது