உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222


'தயவு செய்யுங்கள்,' என்று மெள்ள அவன் பிடியிலிருந்து நழுவினுள் ஈஸ்". "நான் பூரணமாக உங்களுடையவளே. ஆளுல் அதுவும் சில தினங்கள் வரையில்தான்; பின் நாம் கணவன்-மனைவியாக ஆகிவிடுவோம். நான் முழுக்க முழுக்க உங்களுக்கே சொந்தமானவள். ஆகவே, அதற்காக வேண்டியதை நாம் மகிழ்ச்சியோடு எதிர் பார்ப்போமாக” என்ருள் அவள். பிறகு, அவள் கரங்கள் அவன் கழுத்தை வளைத் தன. இதற்குமுன் கொடுத்த எல்லா முத்தங்களி னின்றும் வேறுபட்ட முறையில் அவனுக்கு ஒரு முத்தம் ஈந்தாள் அவள். இஷ்டமில்லாமல் அவளைப்போக அனுமதித் தான் அவன். அவள் புறப்பட்டபோது திரும்பி, "நான்கு மணிக்கு' என்ருள். ஆற்றின் மறுகரையில், அழகிய நாட்டுப்புறத் தோற்றத்துடன் மதப் பிரச்சார சபை இல்லம் தென் ப. கு தி யி ல் அமைந்திருந்தது. ஆற்றங்கரையை நோக்கிப் பாதையொன்று சென்றது. தெற்கிலுள்ள பெரும்பாலான மதப்பிரச்சார சபை இல்லங்கள் மாதிரி, மரங்கள் சூழ்ந்து கணிசமான நிலப்பரப் புடன் புத்தராலயம் போன்றே விளங்கியது. - மணி நான்கு! இல்லக் கதவைக் கவனமாகத் திறந்துவைத்து விட்டு, படிகளில் இறங்கி, படர் கொடியால் மூடப் பட்டிருந்த மதில் சுவரினின்றும் யாரும் அறியா வண்ணம் மெல்லக் குதித்துவெளியேறினன் ஜேம்ஸ்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/222&oldid=1274948" இலிருந்து மீள்விக்கப்பட்டது