பக்கம்:இலட்சிய பூமி.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246


தாங்கள் சாப்பிட்டுவிட்டதாக அவர்கள் சொன் ஞர்கள். தன் கைக்கடிகாரத்தின் மீது டார்ச் விளக்கை அடித்துப் பார்த்தான். இதுதான் சரியான நேரம். இதைவிட இன்னும் சீக்கிரமாக நாங்கள் வந்துசேர விரும்பவில்லை. ஏனென்ருல் நாம் பிரதானச் சாலையை அடையும் போது பிரயாணிகள் சிலர் தென்படலாம்! சாப்பிட ஏதாவது வைத்திருந்தால் இப்போதே சாப் பிட்டுவிடுங்கள். இன்றிரவு சாப்பிடுவதற்கு வேறெது வும் கிடைக்காது” என்ருன் ஃபான். 'அசாய் நம்முடன் அங்கே இருப்பான?” என்று சிறுவன் ஸ்ப்ரெளட் மீண்டும் கேட்டான். “எனக்குத் தெரியாது. எப்படியும் அவன் சமா ளித்து வந்திருப்பான் என்றே நான் நம்புகிறேன். பார்க்கலாம் நம்மில் எத்தனை பேர் இங்கு இருக்கி ருேம்?” என்று கேட்டுவிட்டு நபர்களை எண்ணினன் அவன். 'அந்த அம்மாள் யார்?' என்று ஸ்வாட்டைச் சுட்டியவாறு குழப்பமடைந்து கேட்டான் ஃபான். ஜேம்ஸ் விவரித்தான்: 'அவளை நம்மோடு வரும் படி நான்தான் அழைத்தேன். துப்பாக்கிச் சூடு நடந்தபோது அவள் தன் குடும்பம் முழுவதையும் இழந்துவிட்டாள். உங்களுக்கு இதில் மறுப்பு இருக் காதென்று நம்புகிறேன். ஃபான் வந்து சேர்ந்ததில் ஜேம்ஸ் நிம்மதி எய்தின்ை. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/246&oldid=1274965" இலிருந்து மீள்விக்கப்பட்டது