பக்கம்:இலட்சிய பூமி.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81? திருந்த அம்மலைகளின் எல்லையில்தான் பொதுவாக கிராமச் சாலைகள் சென்றன. கண்ணி வைத்து மிருகங்களைப் பிடிப்பவர் சிலர் காட்டுப் பன்றிகள், மான்வகைகள், முயல்கள் ஆகியவைகளை வேட்டை யாடி இங்கே வாழ்ந்து வந்தார்கள். பிங்ஷான் நகரத்தை நோக்கி மூன்று, நான்கு மைல் நீளத்துக்கு ஒடிய ஹாலிவாங்ஷா ஒடையின் தலைப்பில் இருந்த கிராமங்களிலே ஹகுவாங்ஷா கெங்கும் ஒன்று. விஸ்தாரமான இந்த மலைப்பகுதியை ஒட்டி பாஒ-ஆன் மாவட்ட எல்லையென வரையறுக்கப் பட்ட கற்பனைக் கோடொன்று ஓடியது; அதன் காரணமாக, நீதியினின்றும் தப்பி ஓடியவர்களுக்கு அது ஒரு வசதியான புகலிடமாகப் பயன் பட்டது. ஆயினும், கடந்த சில ஆண்டுகளில் எண்ணற்ற பிரயாணிகள் அதை கடந்து சென்றனர். ஹாலிவாங் ஷாகெங்கிலும் பிலிங்சூனிலும் வசித்தவர்கள் சிலர் பாஒ-ஆன் மாவட்டத்தின் எல்லைவாசி'களாக அடையாளச் சீட்டுப் பெறும் சலுகை கொண்டிருந் தார்கள். அத்தகைய அனுமதிச் சீட்டுடன் ஒருவன் எல்லை நெடுகிலும் சுதந்திரமாகப்பிரயாணம் செய்ய வும், குடியானவர்கள் விளைவுப் பொருள்களை பிரிட் டிஷ் பகுதிக்குள் கொண்டு செல்லவும் உரிமை அளித்தது. - இப்பகுதியில் வசித்தவர்கள் சிலர், சட்டப் படியும், சட்டவிரோதமான வர்த்தகத்தின் மூலமும் அதிக அளவு பணம் சம்பாதித்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/317&oldid=752896" இலிருந்து மீள்விக்கப்பட்டது