பக்கம்:இலட்சிய பூமி.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

818 சைசாமின் குடிசை குறுகலான நீரோடையின் கரையில் இருந்தது, ஃபான் ஒருபோதும் இவ்வளவு துரம்வரை வந்ததில்லை. அவனது விவகாரங்கள் யாவும் வழக்கமாக பிங்ஷானிலேயே முடிந்துவிடும். இந்தத் தடவை இவ்வளவு தூரம் வரவேண்டி யிருந்தது; அது ஒரு தனி வீடு; சுற்றிலும் பேரீச்ச மரங்கள் இருந்தன. அவன் கதவைத் தட்டினன். நாற்பது வயது கடந்த பருத்த குடியானவப் பெண்மணி ஒருத்தி கதவைத் திறந்தாள். அவள் ஃபானைக் கூர்ந்து பார்த்தாள். வெள்ளைக்காரனையும் அவனுக்குப் பின்னல் நின்றுகொண்டிருந்த குழுவின ரையும் அவள் பார்வை கவர்ந்தது. உடனே அவள் புரிந்துகொண்டாள். "நான் வெய்ச்சோவைச் சேர்ந்த ஃபான் ஷெக்டின்; இவர்கள் என் நண்பர்கள்.” "ஓஹோ சரி உள்ளே வாருங்கள்; என் கணவர் வெளியூர் போயிருக்கிரு.ர். அவர் ஹாங்காங்குப் போகும்போது என்னிடம் தகவல் கூறிவிட்டுச் சென்ருர். உங்கள் குழுவினர் பிங்ஷானுக்கு வந்து கொண்டிருப்பதாக என் மகன் சொன்னன்.” தளம்பாவப்படாத தரையுடன்இருந்தஇருண்ட அறையை கண்ணோட்டமிட்டான் ஃபான். அறையில் நான்கு பையன்கள் இருந்தனர்; அவர்களில் இளைய வர்களான இருவர் சுவர் ஒரமிருந்த படுக்கையில் அமர்ந்திருந்தனர். மூத்தவனுக்குப் பதினெட்டு வயசு. அவன், "நேற்றுப் பிற்பகலில் பிங் ஷானில் இருந்தேன்; அப் போது நீங்கள் தென்படவில்லையென அவர்கள் கூறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/318&oldid=752897" இலிருந்து மீள்விக்கப்பட்டது