உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

319


ஞர்கள். அங்கே நீங்கள் இருந்தீர்களா?” என்று கேட்டான். - “இல்லை. நாங்கள் ஆட்ஸ்-டெள வழியாக நேராக வந்துவிட்டோம். அதனுல்தான் நாங்கள் வரமுடிந்தது; எங்களால் உங்களுக்கு தொந்தரவு ஒன்றும் இல்லை என்றே நம்புகிறேன்.” "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. என்கணவர் இந்நேரத்தில்தான் வீட்டுக்கு வருவது வழக்கம்.” என்று அமைதியான குரலில் பதிலிறுத்தாள் அப் பெண்மணி. "அவருக்கு என்ன வேலை?” "அவர் கண்ணிவைத்து பிராணிகளைப் பிடிப் பவர். இங்கிருக்கும் நாங்கள் உங்கள் மாதிரி வாழ்வ தில்லை. என் கணவர் இரவு; நேரங்களில் அடிக்கடி வெளியே சென்றுவிடுவார்.” லெய்வாவோடும் மற்றவர்களோடும் ஃபான் கலந்தாலோசித்தான். ஜேம்ஸ் மறைந்து தப்பிச்சென்ற விவரம் கண்டு பிடிக்கப்பட்டுவிடும் என்றும் எவ்வளவு விரைவாக வெய்ச்சோவிலிருந்து வெகு தூரம் செல்லமுடியுமோ அவ்வளவிற்கு விரைவாகச் செல்வதே நல்லதாகும் என்றும் முடிவுசெய்தனர். ஈஸ்-வும் அவ்வாறே நினைத்தாள். ஆனல் அவர்கள் இப்போது இங்கு மலைமீது இருந்தார்கள். சைசாம் திரும்பும்வரை அவர்கள் காத்திருப்பதைத் தவிர வேருென்றும் செய்வதற்கில்லை. - 'உங்கள் கணவர் திரும்பும்வரை நாங்கள் இங்கே தங்கமுடியுமா?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/319&oldid=1275012" இலிருந்து மீள்விக்கப்பட்டது