பக்கம்:இலட்சிய பூமி.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

820 தாராளமாகத் தங்கலாம். உங்களை யாரும் தொந்தரவு செய்யமாட்டார்கள். ஏராளமான இடம் இருக்கிறது. ரோந்துப் படையினர் சில வேளைகளிலே எதிர் பக்கத்திற்கு வருகின்றனர். இந்தப் பாதையில் அவர்கள் வருவதில்லை. இங்கே வாருங்கள், உங்களுக்கு இடங்களையெல்லாம் காட்டு கிறேன்.” அந்த அம்மாள் ஒரு மெழுகுவத்தியைக் கொளுத்தினுள்; வீட்டின் பின்புறத்தை நோக்கி சுறு சுறுப்பாக நடந்தாள். ஊசி இலைமரக்காட்டுக்கு செல்லும் அகலமான ஓர் இடம் காணப்பட்டது. இடைவெளி கொல்லைப்புறமாக பயன் படுத்தப் பட்டது; அதற்கு அருகாமையில், ஊசி இலைமரங் களுக்கடியில் சவுக்கண்டி ஒன்று இருந்தது, அவள் கதவைத் தள்ளித் திறந்தாள். உள்ளே விறகுக் குவியல் தாறுமாருகக் கிடந்தது. ஒரு முடுக்கில் துண்டுபோடப்பட்ட கட்டைகள் சில இருந்தன. சுவரில் பழங்கால மோஸ்தருடன் கூடிய துப்பாக்கி, நெருப்புக்கல், கூடைகள், ரம்பம் முதலி யனவும் உழவுக்கு வேண்டிய பல்வேறு சாதனங் களும் இருந்தன. கூரையில் உள்ளிப்பூண்டுச்செடி போன்ற இன்னும் சில செடிவகைகள் வேயப்பட் டிருந்தன. - இதைத்தவிர நீங்கள் தூங்குவதற்கு வசதியான இடம் என்னிடம் இல்லை. அதை உபயோகித்துக் கொள்ள முடியுமானல் இராப்பொழுதுக்குப் பாது காப்பான இடம் இது. - - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/320&oldid=752900" இலிருந்து மீள்விக்கப்பட்டது