உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

321


கடினமான பிரயாண அசதியினல் சோர் வடைந்த அவர்களுக்குத் துக்கம் கண்களைச் சுழற்றி யது. அந்த அம்மணி அவர்களுக்குத் தேநீர் கொணர்ந்தாள். டுவானும் பிறரும் தரையில் அகப் பட்ட இடத்தில் சாய்ந்தார்கள். ஜேம்ஸும் ஈஸுவும் ஒய்வுகொள்ள வெளிப்புறத்தில் ஒர் இடத்தைத் தேடினர்கள். மரங்களுக்கடியில் பரப்பிக் கிடந்த ஊசி இலைகளின் விரிப்பை அவர்கள் கண்டுபிடித் தார்கள். மென்மை மிகுந்த இயற்கையான அந்தப் படுக்கையின்மீது தன்னுடைய மேற்சட்டையை விரித்தான் ஜேம்ஸ். 'நான் எங்கே தூங்கட்டும்?” என்று ஈஸ்" கேட்டாள். “என் மேற் சட்டைமீது! உன் மேற் சட்டை போர்த்திக்கொள்ளுவதற்கு இருக்கட்டும்” என்ருன் ஜேம்ஸ். ஈஸா ஏதும் சொல்ல வில்லை; அவள், இதயம் படபடத்தது. ஆனல் சிறிது நேரத்தில் அவர்கள் ஒருவரையொருவர் அனைத்த வண்ணம் படுத்துக் கொண்டனர். அவள் மல்லாந்து திரும்பிக்கொண் டாள். மேலே உயர்ந்த மரங்களின் விதானத்தையும், அவற்றுக்கு மிக அதிக உயரத்தில் ஊடுருவ இயலாத நட்சத்திரப் பிரபஞ்சத்தையும் இருவரும் கண்டனர். ஆயினும், ஊசி இலை மரக்காடு, நீலவானம், பைன் மரத்தின் நறுமணம் மகிழ்வூட்டும் மலைக்காற்று, இரவின் அந்தரங்கம், புதிய இடத்தின் குழப்பம் ஆகியவை யாவும் சேர்ந்து கவலை தரும் அன்றைய நினைவுகள் அனைத்தையும் துடைத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/321&oldid=1275013" இலிருந்து மீள்விக்கப்பட்டது