பக்கம்:இலட்சிய பூமி.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

323


'செளகரியம்தான் என் தகப்பளுருக்கு எப் போதும் ஏதாவது வேலை இருந்து கொண்டே இருக்கும்.” 'அதாவது இவ்வழியே பிரயாணிகள் பலர் அடிக்கடி வந்து கொண்டிருக்கிருர்கள் என்று சொல்கிருயா?” "ஆமாம்; சென்ற கோடையில் நூற்றுக்கணக் கான பேர்கள் வந்தார்களே அவர்கள் பெருங் கூட்டமாக வந்து காடுகளுக்குள் பதுங்கி மறைந் தனர். அவர்களை என்ன செய்வதென்றே ரோந்துப் படைகளுக்குப் புரியவில்லை.” 'ரோந்துப் படைகளின் தொகை எவ்வளவு இருக்கும்?” 'மூன்று அல்லது நான்கு பேர்கள் அடங்கிய பிரிவுகள் கொண்டது. எதிர்க்கரையிலிருக்கும் பிலிங்சூனுக்கு அவர்கள் சில சமயங்களில் வருவ துண்டு.” "ரோந்துப் படையினர் என்ன செய்வார்கள்?” கின்ஷான் பேசலாளுன்: 'நேற்று நாங்கள் பிங்ஷானில் இருந்தோம். நிறையப் பேர்கள் வீதி களிலே அலைந்து திரிந்து கொண்டிருந்தார்கள். வெய்ச்சோவிலிருந்தும், போக்லோவி லிருந்தும் அவர்கள் வந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். பிப்ஷான் காவல் படையினரோடு அவர்கள் சண்டை பிடித்தார்கள். அவர்கள் பேரில் காவல் படையினர் கூடிய விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள் என நான் ஊகம் செய்கிறேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/323&oldid=1275015" இலிருந்து மீள்விக்கப்பட்டது