உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

359


என்பது. மற்றக் குற்றச்சாட்டுகளுடன் சேர்த்து என்மீது சுமத்தியதாகும். என் தாத்தா காலத்தி லிருந்து நாங்கள் எத்தனை பேருக்குப் பணம் கொடுத் திருந்தோம் என்பதைக் கடவுள் அறிவார். தேவை ஏற்படும்போது எங்களுடைய சுற்றத்தார்கள், பணி யாட்கள், நண்பர்கள் எல்லோரும் எங்களுடைய உதவியை நாடி வந்தார்கள். அவர்கள் டெங்பிங்கின் அப்பாவையும் சேர்த்து பன்னிரண்டுக்கு மேற்பட்ட சாட்சிகளைத் தயார் செய்திருந்தார்கள். நானும் அவனும் சிறந்த நண்பர்களாக இருந்தோம், நாங்கள் டெங்பிங்கின் கல்விக்காகத்தான் பணம் கொடுத் திருந்தோம்; கடனுக்காக அல்ல என்பதை அவன் அறிவான். ஆயினும் டெங்பிங் தன் தந்தையை எனக்கு எதிராகச் சாட்சி கூறும்படி நிர்ப்பந்தப் படுத்தினன். அவர்கள் என்னை நோக்கி குரங்குகளின் கூட்டம் போன்று உரக்கக் கூச்சலிட்டுக் கொக்க ரித்துக் கொண்டிருந்தார்கள். ஆனல், அங்கே தரையில் மண்டியிட்டு கைகளைப் பின்னல் கட்டிய வாறு, ஒருவர்பின் ஒருவராக சாட்சிகளின் கூற்றுக்கு செவிசாய்த்துக் கொண்டிருந்தேன். உடம்பின் வலியும், கூட்டத்தின் கூக்குரலும், மக்களின் அர்த்த மற்ற உளறல்களும் ஒரு மனிதன் சகிக்க முடியாத அளவுக்கு இருந்தன. மற்றவர்களைச் சுட்டதைப் போல் என்னையும் சுடப்போகிருர்கள் என்றுதான் நான் நினைத்தேன். டெங்பிங் மனத்தில் வைத் திருந்தது அதுவல்ல, அது வேறு என்பதை சிறிது நேரம் வரை நான் புரிந்துகொள்ளவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/359&oldid=1275038" இலிருந்து மீள்விக்கப்பட்டது