பக்கம்:இலட்சிய பூமி.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360


'குற்றத்தை வெளிப்படையாக ஒப்புக்கொள் கிருயா?-சதுக்கத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக மேடையிலிருந்து டெங்பிங் கத்தினன். "ஒப்புக் கொள்ளும் அளவுக்கு நான் ஒன்றும் செய்யவில்லை” என்று நான் பதிலளித்தேன். எனக்கு என்ன நேரப்போகிறது என்பதைப் பற்றி நான் உண்மையிலேயே லட்சியம் செய்யவில்லை. 'நன்று, அவனை ஒரு மூலைக்கு இழுத்துச் செல் லுங்கள் என்று அவன் கத்தினன். நீங்கள் வரிசை யில் அவனை விட்டு அப்பால் நில்லுங்கள். அவன் முகத்தில் ஒவ்வொருவராகக் காறி உமிழ்ந்து அதன் மூலம் கட்சியிடம் உங்களுக்குள்ள பற்றைத் தெரிவி யுங்கள். பிற்பாடு அவனை நான் கவனித்துக்கொள் கிறேன்” என்ருன். 'உண்மையிலேயே அது மிகப் பயங்கரமானதாக இருந்தது. ஆல்ை, சிறிது நேரம் என்னுடைய உணர்ச்சியே மரத்துப் போயிருந்தது. நான் எதை யுமே உணரவில்லை. 'அடுத்து டெங்பிங் தன் தந்தை வந்துகொண் டிருந்ததைப் பார்த்தான். இது அவர் முறை. என் முகத்தில் அவர் உமிழ்வதற்காக எனது தலையை நிமிர்த்தினேன். ஆனால் அவர் தயங்கி நின்றுவிட்டார். அவர் என்னை நோக்கினர். நான் அவரை நோக்கினேன். எங்களது கண்கள் சந்தித் தன. விரைவில் வருக, இது உங்கள் முறை என்று நான் கூறினேன். அவர் என்னைப் பார்த்தார். அவர் விழிகளில் கண்ணிர் தளும்பியிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/360&oldid=1275039" இலிருந்து மீள்விக்கப்பட்டது