உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

361


வாருங்கள் அப்பா, உங்கள் காரியத்தை முடி யுங்கள் என்று டெங்பிங் அவரைப் பார்த்துச் சொன்னன். அப்போது டெங்பிங்கைப் பார்த்து நான் என்ன நினைத்தேன் என்பதை உங்களுக்கு நான் கூற இயலாது. ஆனால், அவன் தந்தை நினைத்தது நான் நினைத்ததைவிட மோசமானது என்பதை நான் அறிவேன்.” 'மகனே, உனக்குக் கல்வி புகட்டியவனின் மேல் காறி உமிழ்வதற்கு என்னிடம் எச்சில் கிடையாது' என்று அவர் கூறினர். இதைக் கூறிவிட்டு, அவர் அநேகமாக மூர்ச்சையடைந்துவிட்டார். அவர்கள் அவரை அவ்விடம் விட்டு தூக்கிச்செல்ல வேண்டிய தாயிற்று. 'இதுதான் நான் என்றும் மறக்க இயலாதது!” என்று முடித்தான் ஃபான். - சத்திரப் பொறுப்பாளனின் மனைவி கதவின் வழியாகத் தன் தலையை நீட்டிக் கூறினுள்: 'உங்களுக்கு அவசியமில்லை என்ருல் விளக்கைக் கொஞ்சம் தாழ்த்தி வைப்பீர்களா?” அவர்கள் அப்படியே செய்து விட்டு, தாங்கள் எங்கிருக்கிருேம் என்பதையும் மறந்து, சீக்கிரமே தூக்கத்தில் ஆழ்ந்தார்கள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/361&oldid=1275040" இலிருந்து மீள்விக்கப்பட்டது