உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயம் 17 மேல் மாடியில் கேட்ட அரவத்தில்ை ஜேம்ஸ் விழித்துத் தன்னுடைய நாற்காலியில் நெளிந்தான். ஃபான் பலமாகக் குறட்டை விட்டபடி மேஜைமீது துரங்கிக்கொண்டிருந்தான். அவனுடைய மீசையின் மேல்முனை ஒரே சீராக அசைந்துகொண்டிருந்தது. நாற்காலி மீதும் விசுப்பலகைமீதும் சற்று அமர்ந்தும் சற்று துரங்கியும் இரவைக் கழித்ததால் ஜேம்ஸுக்கு இரவு பூராவும் உடம்பு வலித்தது. காலை நீட்டிப் படுத்திருந்த இரு உருவங்களுக்கு இடையில் உள்ள குறுகலான வழியே, நீர் நிரம்பிய போகணியைக் கையில் தூக்கிக்கொண்டு, இரவு பரி மாறிய அப்பெண் கவனமாக கால் வைத்து நடந்து மாடிக்குப் போய்க்கொண்டிருந்தாள். வெளியே யாரோ ஒருவனுடன் ஸ்வாட் பேசிக்கொண்டிருந்தது ஜேம்ஸின் காதில் விழுந்தது. கோட்டைக் கழற்றி எரிந்துவிட்டு, தன் முதுகு வலி தாங்காமல் இடுப்பில் கையை வைத்து அழுத்திக் கொண்டு நின்ருன் அவன். கீழே படுத்துக் கிடப் பதைவிட அமர்ந்திருப்பதோ நிற்பதோ அவனுக்கு செளகரியமாக இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/362&oldid=752946" இலிருந்து மீள்விக்கப்பட்டது