பக்கம்:இலட்சிய பூமி.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376


ணுகவே இருக்கவேண்டும்! இப்படி உட்காரு, நான் உன்னிடம் பேச விரும்புகிறேன்.” தாத்தாவின் கையிலிருந்து நழுவி புகைப்படத் துடன் பையன் விளையாடிக்கொண்டிருந்தான். அது ஒரு பழைய போட்டோ, அதில் ஈஸ் தனது இரண்டு மூத்த சகோதரர்களுடனும் பெற்ருேர் களுடனும் ஆறு வயதுச் சிறுமியாகத் தென் பட்டாள். ஈஸ் படுக்கையின் விளிம்பில் சாய்ந்து உட்கார்ந்தாள். டுவான் படுக்கையின் மேல் ஊன்றி யிருந்த தன் புதல்வியின் கையை எடுத்தான். "ஈஸா, நான் உன்னை நம்பித்தான் வாழவேண்டி யிருக்கும் என்று ஒரு போதும் எண்ணியதில்லை” என்று அவன் சொன்னன். 'நீ ஒரு நல்ல பெண்; அதில் நான் பெருமைப்படுகிறேன். ஜேம்ஸ் வருவ தற்கு முன்னல், நான் கவலையுடன் இருந்தேன். நீ இத்தனை ஆண்டுகளாக அவனை எதிர்பார்த்துக் காத் திருந்தாய்; நான் உன்னை ஆசீர்வதிக்க விரும்பு கிறேன். ஆனல் அதை எப்படிச் செய்வதென்றுதான் எனக்குத் தெரியவில்லை. இப்படி பக்கமாக வா” அவன் ஈஸுவின் தலையிலும் பின்பு சிறுவனின் தலையிலும் தனது கையை வைத்து "ஆண்டவன் உங்களை ஆசீர்வதித்து என்றும் ரட்சிப்பாராக!" என்று கூறினன்; அவனுள் உணர்ச்சிபொங்கி வார்த்தைகள் தொண்டையில் அடைபட்டன; கண்களைத் துடைப் பதற்காக ஒரு விரலை உயர்த்தின்ை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/376&oldid=1275046" இலிருந்து மீள்விக்கப்பட்டது