உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ყუ ↑ 'அப்பா, எல்லாம் சரியாகிவிடும். கவலைப் படாதீர்கள்!' அவனுடைய நாசித் துவாரங்கள் சிறிது விரிவடைந்தன. "நான் அந்தத் பழைய புகைப் படத்தை பார்த்துக்கொண்டிருந்தேன்!” அவனு டைய கண்கள் தூரத்துப் பார்வையில் லயித் திருந்தன. "அப்போது நம்முடையது ஒரு மகிழ்ச்சி யான குடும்பம் இல்லையா? உன் அன்னை போய்விட் டாள்; நான் ஒரு காலத்தில் குடும்பத்திற்காகப் பெரிய திட்டங்கள் தீட்டினேன். ஆனல் உன் னுடைய சகோதரர்களும் விதி வழியே போய்விட் டார்கள். மனிதர்கள் நினைக்கிரு.ர்கள்; கடவுள் நிச்சயிக்கிருர் என்று பழமொழி கூறுகிறது. நான் என்னல் முடிந்த அளவு உங்களுக்குச் செய்திருக் கிறேன். ஆனல் இவைகளெல்லாம் தற்செயலாக நடந்தவை. சிறுவன் ஸ்ப்ரெளட்தான் என்னுடைய வம்சத்திற்கு விதை. நான் இறந்தபிறகு அவனைக் கவனித்துக்கொள். நான் உன்னை நம்புகிறேன்.” "அப்பா, நீங்கள் ஏன் இதையெல்லாம் பேசு கிறீர்கள்?" டுவானின் உதடுகளிலிருந்து வார்த்தைகள் லேசாக வெளிப்பட்டன. "நான் உன்னுடைய உறுதி மொழியை விரும்புகிறேன்." "அப்பா நான் உறுதியளிக்கிறேன்.” - "அப்படியென்ருல், நான் திருப்தியடைகிறேன்.” கீழே யாரோ பேசும் குரலோசையை அவர்கள் கேட்டார்கள். சில அந்நியர்கள் சத்திரநிர்வாகி யுடன் பேசிக்கொண்டிருந்தார்கள்; கீழே சென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/377&oldid=752962" இலிருந்து மீள்விக்கப்பட்டது